வேலூர், செப். 26- இந்து முன்னணி கோட்டத் தலைவர் மகேஷ். இவர் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலந்து கொண்டார்.
ஆரணி அண்ணா சிலை அருகே அப்போது அவர் சிறப்புரையாற்றினார். அதில் அமைச்சர் உதயநிதி குறித்து அவ தூறாக பேசியதாக கூறப் படுகிறது. இதுகுறித்து ஆரணி தி.மு.க. நகர செயலாளர் ஏ.சி.மணி ஆரணி டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து ஆரணி டவுன் காவல் ஆய்வாளர் சுப்பிரமணி தலைமையிலான காவ லர்கள் வேலூர் சத்துவாச் சாரியில் உள்ள வீட்டில் இந்து முன்னணி கோட்ட தலைவர் மகேஷை கைது செய்தனர்.
அவரை சந்தவாசல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசா ரணை நடத்தி வருகின்றனர்.
இந்து முன்னணி கோட்டத் தலைவர் மகேஷ் மீது 4 பிரிவுகளின் கீழ் காவல்துறையின் வழக்கு பதிவு செய்துள்ள தாக தெரிவித்துள்ளனர்.