திருச்சி, நவ.22- திருச்சி, அண்ணா விளையாட்டரங்கில் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின விழாவை முன்னிட்டு வருவாய் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடை பெற்றது.
இதில், 16 மற்றும் 17 வயதிற் குட்பட்ட மாணவர்களுக்கான டேக்வாண்டோ போட்டியில், திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் மாணவர்கள் பங்கு பெற்று, மாணவர்கள் ரிதன்யா, சந் தோஷ், நித்யசிறீ, ஹரீஸ், ராகேஷ் குமார், ஆகியோர் வருவாய் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கங்களும், மாணவர்கள் ரதீஷ், ரிஷி குமார் ஆகியோர் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கங்களும், மாணவர்கள் தாமரைச்செல்வன், சாஷினி, ஷேக் அப்துல்லா, மோனிகா,அமலேஸ்வரன், மாலினி ஆகியோர் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதக் கங்களும் மகத்தான சாதனை படைத்து பள்ளிக்குப் பெருமை தேடித் தந்துள்ளனர்.
சாதனை மாணவர்களையும், டேக்வாண்டோ பயிற்சி ஆசிரியர் கணேசன் அவர்களையும் பள்ளி முதல்வர் டாக்டர்.க.வனிதா உள் ளிட்ட இருபால் ஆசிரியர்கள் மற் றும் அலுவலகப் பணித் தோழர்கள் பாராட்டி மகிழ்ந்தனர்.