சென்னை, செப். 26- மேனாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் பிறந்த நாளையொட்டி இன்று (26.9.2023) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு,
மேனாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! உலகளாவிய நிதி நெருக்கடியின் போது, பிரதமராக அவரது தலைமை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய கொள்கைகளுக் கான அர்ப்பணிப்பு இந்தியாவின் எதிர்காலத்தை மறு வடிவமைத்தது. அவரது ஆர்ப்பாட்டமில்லாத, அறி வார்ந்த மற்றும் பணிவான அணுகுமுறை எக்காலத்திலும் தலைமைத்துவத்திற்கு மதிப்புமிக்க படிப்பினைகளை வழங்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.
முன்னேற்றம் மற்றும் நிலையான ஆட்சிக்காக என் றும் அவர் நினைவுகூரப்படுவார். இன்னும் பல்லாண்டுகள் அவரது சிந்தனைகள் நமக்கு ஊக்கமளிக்கட்டும்!
– இவ்வாறு முதலமைச்சர் அப்பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.