முதலில் ஒரு சிறிய குச்சியை செங்குத்தாக மண்ணில் ஊன்றவும். தரையில் விழும் அக்குச்சியின் நிழல் உச்சியை குறித்துக் கொள்ளவும் (ஒரு சிறிய கல் அல்லது சிறிய குறியீடு மூலம்). 10-15 நிமிடம் கழித்து அக்குச்சியை காணும்பொழுது அதன் நிழலானது முன்பு குறித்த இடத்தில் இருந்து சற்று விலகி இருக்கும் (விலகும் திசை பெரும்பாலும் மேற்கிலிருந்து கிழக்காக இருக்கும்). இப்பொழுது விலகிய நிழலின் உச்சியை முன்பு குறித்தாற்போல் குறித்து அவ்விரு குறியீடுகளையும் ஒரு நேர்கோட்டின் மூலம் இணைக்கவும். நாம் முதலில் குறித்த இடத்தில் இடது காலையும், இரண்டாவது குறித்த இடத்தில் வலது காலை வைத்து நேராக நிமிர்ந்து நிற்கவும். இப்போது உங்கள் முகம் எந்த திசையை நோக்கி இருக்கிறதோ, அது தான் வடக்கு திசை. நாம் இரண்டு குறியீடுகளை இணைத்து வரைந்த நேர்கோடு கிழக்கு, மேற்கு திசையை குறிக்கும்.
திசைகளைக் கண்டறிய இதுவும் ஒரு வழி!
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books