கடந்த 9.1.2024 அன்று சீர்மரபினர் சமூகத்தின் பிரதிநிதிகள் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் உள்ள 68 சீர்மரபினர் சமூகத்தினருக்கு கடந்த ஆட்சியில் DNC/DNT என்று இரண்டு சான்றிதழ் வழங்கப்பட்டு வந்ததை நீக்கி ஒரே சான்றிதழ் வழங்க அறிக்கை கொடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். ஆசிரியரும் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதியளித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக கடந்த 16.3.2024 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அனைவருக்கும் DNT என்று ஒரே சான்றிதழ் வழங்கப்படும் என்று ஆணை பிறப்பித்தார். இதற்குக் காரணமாக இருந்த ஆசிரியருக்கு தங்களின் மகிழ்வினை தெரிவிப்பதற்காக ஊராளிக்கவுண்டர் முன்னேற்ற சங்கத் தலைவர் செ.கணேசன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் ஆசிரியரைச் சந்தித்து நன்றியைத் தெரிவித்தனர். (பெரியார் திடல், 19.3.2024)