வேலூர் மாவட்ட திராவிடர் கழகம் திமிரி நகர தலைவர் ஜெ.பெருமாள் (வயது 76) 20.03.2024 காலை 8.30 மணி அளவில் உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார். 21.03.2024 வியாழக்கிழமை காலை 7.00 மணிக்கு அன்னாரின் இறுதி நிகழ்வில் வேலூர் மாவட்ட தலைவர் வி.இ.சிவக்குமார், மாவட்ட செயலா ளர் உ.விஸ்வநாதன், மாவட்ட கழக காப்பாளர் வி.சடகோபன், பொதுக்குழு உறுப்பினர் கு.இளங்கோவன், ஆற்காடு நகர தலைவர் கோ.வினாயகம், குடியாத்தம் நகர தலைவர் சி.சாந்தகுமார், திமிரி இளை ஞரணி கு.பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதலும் இரங்கலும் தெரிவித்தனர்.