திருச்சி, நவ. 22- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் தேசிய நூலக வார விழாவினையொட்டி கலைஞூர் கருணாநிதி நூலகம் மருந்தியல் மாணவர்களுக்கான புத்தகக் கண்காட்சியினை 20.11.2023 அன்று நடத்தியது.
பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தா மரை அவர்கள் துவக்கி வைத்த இப்புத்தகக் கண் காட்சியில் நியூசென்சுரி புத்தக நிலையம், காவேரி புத்தக நிலையம் மற்றும் திருச்சி புத்தகநிலையம் பலபொது அறிவு, நல வாழ்வு, போட்டித் தேர்வு கள் மற்றும் மருந்தியல் துறை சார்ந்த பல புத் தகங்களை காட்சிப்படுத் தின..
மருந்தியல் மாணவர் கள் மற்றும் பேராசிரியர் கள் இப்புத்தகக் கண்காட்சியினை பார்வையிட்டு அறிவுக்கு விருந்தளிக்கும் பல அரிய புத்தகங்களை வாங்கிச் சென்றனர் என் பது குறிப்பிடத்தக்கது. இதற்கான ஏற்பாடு களைநூலகர் எஸ்.மீரா மற்றும் துணை நூலகர் அ.சமீம் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.