கரூர், செப். 26- கரூர் மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி சார்பில் தந்தை பெரியாரின் 145 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கருத்தரங்கம் 23.9.2023 காலை 10 மணியளவில் கிராமிய அரங்கம் குளித் தலையில் தீ.முத்துகிருஷ் ணன் (மாவட்ட அமைப் பாளர் பகுத்தறிவு ஆசிரியர் அணி) தலைமையில் நடைபெற்றது.
மு.விஜயகுமார் (மாவட்ட தலைவர் பகுத் தறிவு ஆசிரியர் அணி) அனைவரையும் வரவேற்று பேசினார். “தந்தை பெரியாரும்- தமிழ்நாட்டு கல்வியும்” என்ற தலைப் பில் தஞ்சை இரா.பெரியார் செல்வம் (தலைமை கழக சொற்பொறிவாளர்) சிறப்புரை ஆற்றினார். அவர்கள் பேசும்போது தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் தோன்றியதால் தான் அடிப்படை மக்கள் கல்வி அறிவு பெற்றனர். தந்தை பெரியாரின் முயற் சியினால் பெண்களும் அடிமைத்தனத்திலி ருந்து விலகி கல்வி அறிவு பெற்றனர். அரசுத் துறை கல்வித்துறை பொதுத் துறை நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வியறிவு பெற தந்தை பெரியார் முயற்சியினால் தமிழ்நாட்டு மக் கள் கல்வி அறிவு பெற்ற னர் என்று பேசினார்.
நிகழ்ச்சியில் தொடக்க உரையாக இரா.சிவக்குமார் (மாநில அமைப்பாளர் பகுத்தறிவு ஆசிரியர் அணி) பேசி னார். வா.தமிழ் பிரபாக ரன் (மாநிலத் தலைவர் பகுத்தறிவு ஆசிரியர் அணி), ச.மணிவண்ணன் (துறையூர்), ப,குமாரசாமி (கரூர் மாவட்ட தலை வர்), மு.க.ராஜசேகரன் (மாநில வழக்குரைஞரணி துணைத் தலைவர்), காப் பாளர் வே ராஜு, மாவட் டச் செயலாளர் ம, காளி முத்து, மாநில இளைஞ ரணி துணைச் செயலா ளர் ம, ஜெகநாதன், மா ராமசாமி கலை இலக்கிய அணி செயலாளர், முனை வர் மா.ஆண்டியப்பன், இரா கிருட்டினன் கரூர் ஒன்றிய செயலாளர், பெ, விடுதலை காளிபாளை யம், ஆ மணிவண்ணன் பேட்டவாய்த்தலை, கவி ஞர் கடவூர் மணிமாறன், பொம்மன், பகுத்தறிவா ளர் கழக தலைவர், பெரு மாள் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய தலைவர், மணி வண்ணன் குளித்தலை, கார்த்திகா தேவி, நிரூபன் பிரபாகர், சுந்தரபாண்டி யன், பாபு ரகுபதி கார்த் திக் கரிகாலன் செந்தில் குமார் பொன்னம்பலம் விக்ரம நாதன் குளித் தலை, பேராசிரியர் முனை வர் சுரேஷ், ஆசிரியர் சுரேஷ்குமார், ப. அரி கரன் குமாரமங்கலம், ப.ஜெயராஜ் முனைவர் பட்ட ஆய்வு மாணவர், ராம ஜெயம், பெ, உமா, மாவட்டத் துணைத் தலைவர் பூபதி ராஜ், மா ரத்தின், மாவட்டத் துணைத் தலைவர் முசிறி, விடியல் விக்னேஷ் மகா தானபுரம், சா.மணிவண் ணன் மாவட்ட தலைவர் துறையூர், கருவூர் கண் ணல், தி.முத்துகிருஷ்ணன் பங்கேறறனர்.
குளித்தலை ஓய்வு தமிழ் பேரவை அந் தோணிசாமி இறுதியாக நன்றியுரை கூறினார்.