தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி ஆவடி மாவட்டம் கொரட்டூர்-பாடி பகுதிகளில் கழகக் கொடி ஏற்றம்

Viduthalai
1 Min Read

அரசியல்

ஆவடி, செப். 26- தந்தை பெரியார் அவர்களின் 145ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஆவடி மாவட்ட கழக சார்பில் கொரட்டூர்-பாடி பகுதிக ளில் கழக கொடி ஏற்றும் நிகழ்ச்சி 23-.9-.2023 சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் மாவட்ட தலைவர் வெ.கார்வேந் தன் தலைமையில் மாவட்ட செயலாளர் க.இளவரசன் முன்னிலையில் துவங்கியது.

முதலில் மாலை 6.00 மணிக்கு கொரட்டூர் ரயில் நிலையம் அருகில் கார்வேந்தன்  கொரட்டூர் பேருந்து நிலையம் அரு கில் அம்பத்தூர் பகுதி கழக செயலாளர் அய்.சரவணன் பாடி யாதவா தெருவில் தி.மு.க.நிர்வாகி சங்கர் பிரிட்டானியா எதிரில் ஆலந்தூர் செல்வ ராஜ் கொரட்டூர் தி.மு.க. கிளை கழக அலுவலக வாசலில் கழக கொடியை பகுத்தறிவு பாசறை ஒருங் கிணைப்பாளர் இரா.கோபால் தி.மு.கழக கொடியை மாவட்ட தலைவர் வெ.கார்வேந் தன் அவர்களும் ஏற்றி வைத்தனர்.

நிகழ்வில் ஆவடி மாவட்ட துணை செய லாளர் பூவை தமிழ்ச் செல்வன், அம்பத்தூர் பகுதி கழக தலைவர் பூ. இராமலிங்கம், முகப்பேர் முரளி, தென் சென்னை மாவட்ட கழக துணை செயலாளர் அரும்பாக் கம் சா.தாமோதரன், பாடி முத்தழகு, ஆவடி மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி செய லாளர் ஏ.கண்ணன், சிவ குமார், ஜெயந்தி அன்பு மணி, அறிவுமதி, பிச்சு மணி, பொண்ணுரங்கம், லோகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *