‘நிலவு’ பூ.கணேசனின் நூற்றாண்டு விழாவில் அவரது படத்தினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார். உடன்: திராவிட இயக்க தமிழர் பேரவைத் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், திராவிட இயக்க ஆய்வாளர் க. திருநாவுக்கரசு, சட்டமன்ற உறுப்பினர்கள் வழக்குரைஞர் சி.வி.எம்.பி. எழிலரசன், மருத்துவர் நா. எழிலன், கழக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், கழக பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன், கழக பொருளாளர் வீ. குமரேசன், மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளனர். (சென்னை – 19.3.2024)
கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் எழுதியுள்ள “மனித உரிமைக் காவலர் தந்தை பெரியார்” என்ற நூலை தமிழர் தலைவர் வெளியிட, சட்டமன்ற உறுப்பினர் வழக்குரைஞர் சி.வி.எம்.பி. எழிலரசனும்,”The Human Rights Defender Thanthai Periyar” என்ற நூலை தமிழர் தலைவர் வெளியிட சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா. எழிலனும், ‘நிலவு’ பூ.கணேசன் நூற்றாண்டு விழா மலரை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் வெளியிட திராவிடர் இயக்க ஆய்வாளர் க. திருநாவுக்கரசும் பெற்றுக் கொண்டனர். ஆய்வு நூலை எழுதிய நூலாசிரியர் துரை. சந்திரசேகரன், கலைச்செல்வி இணையருக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார். க. செல்வமணி , லதா இணையருக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். (சென்னை பெரியார் திடல் – 19.3.2024)