* பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் சமூகப் பணித்துறை மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்கும் தாய்லாந்தில் நடைபெறவுள்ள 15 யுரோசியா சமூகப் பணியாளர்களுக்கான, பன்னாட்டுக் கருத்தரங்கம் மார்ச் 20, 21, 22 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறுகிறது.
* இந்த பன்னாட்டுக் கருத்தரங்கின் துவக்க விழாவில் பட்டாயா நகர மேயர் பொராமெட் கம்பிச்செட் அவர்களை சமூகப் பணித்துறை மாணவர்களும், பேராசிரியர்களும் சந்தித்தனர். இந்தக் கருத்தரங்கில் சமூகப் பணித்துறை பேராசிரியர்கள் முனைவர். ஆனந்த் ஜெரார்டு செபாஸ்டின், முனைவர். ஞானராஜ் மற்றும் சமூக பணித்துறை மாணவர்கள் க.வெற்றி, ஸ்வேதா, சகானா மற்றும் கவி நிலவு ஆகியோர் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர்.
* இந்த பன்னாட்டுக் கருத்தரங்கில் 19 நாடுகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட சமூகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் சமூகப் பணித்துறை மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் தாய்லாந்தில் நடக்கக்கூடிய 15 யுரோசியா சமூகப் பணியாளர்களுக்கான பன்னாட்டுக் கருத்தரங்கில் பங்கேற்பு

Leave a Comment