‘தினத்தந்தி’, நாளிதழின் நிறுவனர், தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் மேனாள் தலைவர் சி.பா. ஆதித்தனார் அவர்களின் 119ஆவது பிறந்த நாளான இன்று (27.9.2023) சென்னை எழும்பூரில் அமைந்திருக்கும் அவரது சிலைக்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களின் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டு, சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், பொருளாளர் வீ. குமரேசன், துணைப் பொதுச் செயலாளர்கள் ச. இன்பக்கனி, ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ. சுரேஷ், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், ஆவடி மாவட்ட கழகத் தோழர்கள் வஜ்ஜிரவேல், சுந்தரராஜன், உடுமலை வடிவேல், க.கலைமணி, மகேஷ், யுகேஷ், சதீஷ் மற்றும் கழகத் தோழர்கள் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
சி.பா. ஆதித்தனாரின் 119-ஆவது பிறந்த நாள் திராவிடர் கழகம் சார்பில் சிலைக்கு மாலை அணிவிப்பு
Leave a Comment