சக்தி?
♦ சக்தியை அழிக்க நினைக்கும் எதிர்க்கட்சிகள்!
– பிரதமர் மோடி
>> மோடி சொல்லும் சக்திக்குச் சக்தி இருக்குமானால், மோடி ஏன் பதற்றப்படவேண்டும்?
தெரிகிறதே…!
♦அமலாக்கத் துறைக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளேன்.
– பிரதமர் மோடி
>> உண்மைதான்! தேர்தல் பத்திரத்தின்மூலம் கார்ப் பரேட்டுகளிடமிருந்து பி.ஜே.பி. பெற்ற கோடி கோடி யான பணத்தைப் பார்க்கும்பொழுது தெரிகிறதே!
பி.ஜே.பி. அரசின்…
♦ ஊழலுக்கு எதிராக ஒன்றிய அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
– பிரதமர் மோடி
>> சி.ஏ.ஜி. கூறிய ஒன்றிய பி.ஜே.பி. அரசின் ஏழரை லட்சம் கோடி ரூபாய் ஊழலையும் சேர்த்தா?
ஏன் ஒரு பைசாகூட கொடுக்கவில்லை?
♦ வெள்ள நிவாரணமாக தமிழ்நாடு அரசு ரூபாய் 15 ஆயிரத்து 645 கோடி தான் கேட்டது.
– பிஜேபி அண்ணாமலை
>> அப்படியே இருக்கட்டும் ஏன் ஒரு பைசா கூட கொடுக்கவில்லை ஒன்றிய அரசு?
இதுவரை செய்தது என்னாம்?
♦ மக்கள் சேவை செய்வதற்கு ஆளுநர் பதவி ராஜினாமா!
– தமிழிசை சவுந்தர்ராஜன்
>> அப்படியா, இதுவரை செய்தது என்ன சேவையாம்?