சென்னை, செப். 27- நாட்டில் 40 சதவீத மின்வாகனங்கள் தமிழ் நாட்டில் உற்பத்தியானதாகவும், புதிதாக வரும் தொழில்சாலைகளில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக் கப்பட்டு வருவதாகவும் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.
இந்தியாவில் உற்பத்தியாகும் மின்னணு வாகனங்களில் 40 சத வீதம் தமிழ்நாட்டில் உற்பத்தி ஆகிறது என்ற சாதனை பெற்றுள் ளது. இதுகுறித்து சென்னை, தலைமை செயலகத்தில் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நேற்று (26.9.2023) செய்தியாளர்க ளிடம் கூறியதாவது:
தமிழ்நாடு ஆட்டோ மொபைல் உற்பத்தி மற்றும் அனைத்து துறை களிலும் முதல் இடத்தை பிடித் திருக்கிறது குறிப்பாக தமிழ்நாடு மின்னணு வாகனங்களின் தலை நகரமாக மாறும் சூழ்நிலை உருவா கியுள்ளது.
சென்ற ஆண்டு தகவலின்படி, இருசக்கர வாகனங்களில் 70 சதவீதம் தமிழ்நாட்டில் இருந்து உற்பத்தி செய்யப்பட்டது. தற் போது வெளியாகியுள்ள தகவலின் படி இந்தியாவில் விற்பனையாக கூடிய 40 சதவீத மின்னணு வாகனங்கள் தமிழ்நாட்டில் உற் பத்தி ஆனவை. இது தமிழ்நாடு அரசுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்றுதான் கருத வேண் டும்.
மின்னணு உற்பத்தி வாகன உற்பத்தியில் முதலிடம் பெற்றது போலவே மின்னணு வாகனம் உற்பத்தியிலும் நிச்சயமாக இந்த இடத்தை தக்க வைத்துக்கொண்டு ஒரு பிரமாண்டமான வெற்றியை தமிழ்நாடு மின்னணு துறையில் பெறும்.
தமிழ்நாட்டிற்கு பல புதிய தொழில்துறை நிறுவனங்களை கொண்டு வருவதற்கான முயற்சி யில் ஈடுபட வேண்டும் என முதல மைச்சர் அறிவுறுத்தி இருக்கிறார். ஜனவரி மாதம் நடைபெற இருக் கும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு மிகப்பெரிய அளவில் ஒரு மகத்தான முன்னேற்றத்தை மின் னணு வாகன துறை பெறும்.
கோவை உள்ளிட்ட 6 மாவட் டங்களில் மின்னணு வாகனங்கள் தயாரிப்பு பணி மேற்கொள்ளப் பட்டு வருகிறது. சென்னை, கிருஷ் ணகிரியை சுற்றியுள்ள பகுதிகள் தற்போது முதன்மையாக உள்ளது.
திருச்சி மற்றும் கோவையை சுற்றி இருக்கக்கூடிய பகுதிகளும் மிகப்பெரிய வளர்ச்சியை பெறு வதற்கான வாய்ப்பு இருக்கிறது. தூத்துக்குடி, தென் மாவட்டங் களுக்கு மிகப்பெரிய வளர்ச்சியைக் கொடுக்க வேண்டும் என்று தமிழ் நாடு அரசு உறுதியாக இருக்கிறது.
புதிதாக 2 வளர்ச்சி திட்டங்கள் வரவுள்ளது. இந்த ஆட்சியில் புதிய தொழிற்சாலைகளில் மகளிர் களுக்கு முன்னுரிமை வழங்கப் பட்டு வருகிறது. ஓலா, போஸ்க் உள்ளிட்ட தொழிற்சாலைகளில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது என்றார் அவர்.