நாடாளுமன்ற தேர்தல் 2024 – இந்தியா கூட்டணியில் மதிமுக சார்பில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் துரை வைகோ திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சந்தித்து பொன்னாடை போர்த்தினார். துரை வைகோவிற்கு ஆசிரியர் புத்தகத்தை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார். இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கட்சி நிர்வாகிகளுடன் பங்கேற்றார்.
தந்தை பெரியார் நினைவிடத்தில் வைகோ, துரை வைகோ மற்றும் முக்கிய நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பிரின்சு என்னாரெசு பெரியார், கோ. கருணாநிதி, ஆடிட்டர் அர்ஜூன் ராஜ், மல்லை சத்யா, வழக்குரைஞர் அந்திரி தாஸ், ஆ.வந்தியத்தேவன், டாக்டர் ரொஹையா, மு. செந்தில் அதிபன், மாவட்டச் செயலாளர்கள் ஜீவன், சைதை சுப்பிரமணியன் (பெரியார் திடல் – 19.3.2024).