வேட்பாளர் தேர்தல் செலவு ரூ.95 லட்சம் தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு

1 Min Read

சென்னை,மார்ச் 19- மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ரூ.95 லட்சம் வரை செலவு செய்யலாம் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இதில் தமிழ்நாட்டில் உள்ள 39 நாடா ளுமன்ற தொகுதிகளுக்கும், காலியாக உள்ள விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. நாடாளுமன்ற தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் பல் வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது

இந்நிலையில், மக்களவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் மற்றும் வேட்புமனு தாக்கலுக்கான பணிகள் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக ஆலோ சனை நடத்தினார். தேர்தல் அலுவலர் தலைமையில் நடை பெறும் ஆலோசனை கூட்டத்தில் காவல்துறை உயரதிகாரி களும் பங்கேற்றனர். பின்னர் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை கூட்டத்தில் கூறியதாவது;

தமிழ்நாட்டில் 68,144 வாக்குச்சாவடி மய்யங்கள் அமைக் கப்பட உள்ளன என்றும், டிசம்பர் மாதத்துக்கு பின் 90,000 முதல் தலைமுறை வாக்காளர்கள் சேர்ந்துள்ளனர் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள் ளார். நாடாளுமன்ற தேர்தல் செலவிற்காக தமிழ்நாடு அரசிடம் 750 கோடி ரூபாய் கேட்கப்பட்டு உள்ளதாகவும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவுத் தொகை 95 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட் பாளர்கள் ரூ.95 லட்சம் வரை செலவு செய்யலாம். சட்டப்பேரவைத் தொகுதிக்கு வேட்பாளர்கள் ரூ.40 லட்சம் வரை செலவு செய்யலாம் என்று சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *