விழுப்புரம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவரும், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியருமான விழுப்புரம் மானமிகு
ப. சுப்பராயன் (வயது 71) இன்று (18.3.2024) விடியற் காலை மறைவுற்றார் என் பதை அறிவிக்க வருந்து கிறோம். பணியில் இருந்த போதும் சரி, ஓய்வுக்குப் பிறகும் சரி விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்பான வகையில் இயக்கப் பணியாற்றிய கொள்கை வீரராக வலம் வந்தவர். அவர் பிரிவு அவரின் குடும்பத்தாருக்கு மட்டுமல்ல; இயக்கத்திற்கும் இழப்பாகும்.
அவரது வாழ்விணையர் செல்வி, மகன் கமலக்குமார் (உகாண்டாவில் பணியாற்றி வருகிறார்) தமிழ்க்குயில் (மருமகள்) இளைய மகன் கரிகாலன் (ஒடிசாவில் பணி) மருமகள் ஜெயஞான பிரியா உள்ளிட்ட அனைவருக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தலைமைக் கழகத்தின் சார்பில் பொதுச் செய லாளர் வீ. அன்புராஜ் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்று மரியாதை செலுத்துவார்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
18.3.2024
குறிப்பு: இறுதி ஊர்வலம் 19.3.2024 பிற்பகல் 2 மணிக்குப் புறப்படும். தொடர்புக்கு: 7708014985, 9894741442
