தந்தை பெரியாருடைய கருத்துகளை அனைத்து மக் களுக்கும் எடுத்துக்கூறும் வகையில் நாகர்கோவில் பெரியார் புத்தக நிலையம் சார்பாக கன்னியாகுமரியில் அனைத்து கிராமப்புறங்களிலும் பெரியார் நூல்கள் திட்டம் தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பி.பாபுஅவர்களுடைய ஆலோசனையின் பெயரில் தோவாளை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஞாலம், தடிக்காரங்கோணம் ஊராட்சிகள், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம் தேரேகால் புதூர் ஊராட்சி, திருவட்டார் ஊராட்சி ஒன்றியம் குமரன்குடி, கண்ணனூர், அருவிக்கரை ஊராட்சிகள் முஞ்சிறை ஊராட்சி ஒன்றியம் தூத்தூர், மங்காடு,சூழால், மெதுகும்மல் ஊராட்சி களிலும் தந்தை பெரியாருடைய நூல்கள் வழங்கப்பட்டன.
இந்த நிலையில் முஞ்சிறை ஊராட்சி ஒன்றியம் மெது கும்மல் ஊராட்சியில் நாகர்கோவில் பெரியார் புத்தக நிலைய பொறுப்பாளர் கோ.வெற்றிவேந்தன் ஊராட்சி மன்ற செயலா ளர் மோகனராஜ் அவர்களை சந்தித்து பெரியார் நூல்களை வழங்கினார்.
தொடர்ந்து அனைத்து கிராமங்களிலும் பெரியாருடைய நூல்கள் பரப்புரை பணி நடைபெற்று வருகிறது.
கிராமப்புறங்களிலும் பெரியார் நூல்கள் திட்டம்
Leave a Comment