அரியலூர் மாவட்டம். பொன்பரப்பி ப. முத்துக்குமரன் அவர்கள் அரியலூர் மாவட்டத்தில் செய்துவரும் தமிழ்ப் பணியினை பாராட்டி 22.02.2024 அன்று சென்னையில் நடைபெற்ற தமிழ் வளர்ச்சித் துறை விழாவில், தமிழ் வளர்ச்சி மற்றும், செய்தித்துறை அமைச்சர், மு.பெ.சாமிநாதன் தமிழ் நாடு அரசின் “தமிழ்ச்செம்மல்” விருது வழங்கி சிறப்பித்தார். விருது பெற்ற பெரியார் பெருந்தொண்டர், ப.முத்துக் குமரன் (வயது 94) அவர்களை, மாவட்ட கழக தலைவர் விடுதலை நீலமேகன் தலைமையில் தோழர்கள் சந்தித்து ஆடை போர்த்தி கழகத்தின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்தனர், வருகை தந்து வாழ்த்திய, மாவட்ட செயலாளர் மு. கோபால கிருஷ்ணன், காப்பாளர்.சு.மணிவண்ணன், செந்துறை சா.இரா சேந்திரன், மதியழகன் ஆகியோருக்கு முத்துக்குமரன் கழக நூல்கள் வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தார். (25.02.2024)
‘தமிழ்ச் செம்மல்’ விருது பெற்ற பெரியார் பெருந்தொண்டருக்கு வாழ்த்து

Leave a Comment