பெரியார் நூலக வாசகர் வட்ட வாழ்நாள் உறுப்பினர் தி.சு.தேவேந்திரன் இணையர் தே.விசயகுமாரி அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவு நாளை (17.3.2024) முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.400 நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி!
– – – – –
சிவகாசி மாநகர கழக பொறுப்பாளர் தோழர் ஜீவா முனீஸ்வரன் – கார்த்தீஸ்வரி இணையரது மகள் பெரியார் பிஞ்சு ஜீ.கா.தமிழினி (16.03.2024) இரண்டாவது பிறந்த நாள் மகிழ்வாக நாகம்மையார் குழந் தைகள் இல்லத்திற்கு ரூ.3000 நன்கொடை வழங்கினர். மிக எளிமையாக நடைபெற்ற பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் இயக்க வெளியீடான “பெண் ஏன் அடிமையானாள்?” நூல் பரிசளிக்கப்பட்டது. வாழ்த்துகள்.
– – – – –
வடசென்னை மாவட்டம் பெரம்பூர் பகுதி கழகத் தலைவர் மங்களபுரம் பாஸ்கர் – ரமணி இணையர் விடுதலை வளர்ச்சி நிதிக்காக ரூ.1000 நன்கொடை வழங்கியுள்ளனர்.
– – – – –
கோபி கழக மாவட்டம் கரட் டடிபாளையம் சுயமரியாதைச் சுடரொளி நகைச்சுவையரசு புலவர் க.ந.கருப்பண்ணன் (நகைச்சுவையுடன் சிந்திக்க வைத்த எதார்த்தப் பேச்சாளர்) அவர்களது 5ஆம் ஆண்டு நினைவு நாளை (18.3.2024) முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.3000 விடுதலை வளர்ச்சிக்கு௹ ரூ.2000 அவர் மகள்கள் டாக் டர் அன்புமலர், பொறியாளர் கண்ணகி மற்றும் அவரது வாழ்விணையர் காஞ்சனா ஆகியோர் தலைமைக் கழக அமைப்பாளர் ஈரோடு த.சண்முகத்திடம் வழங்கினர்.