போலீஸ் உத்தியோகங்களைத் தாழ்த்தப்பட்டவர் களுக்கே கொடுக்க வேண்டும். அவர்களை அக்கிரகாரத்தில் குடியிருக்கச் செய்ய வேண்டும். தீண்டாமை பாராட்டாத சிறந்த கிராமங்களுக்குப் பரிசளிக்க வேண்டும். தாழ்த்தப் பட்டவர்களுக்கென்று தனியாகச் சேரி கட்டி அங்கே அவர்கள் குடியேறுவதை முற்றிலுமாக மாற்ற வேண்டும். எக்காரணத்தின் பொருட்டாவது தாழ்த்தப்பட்டவர்களுக் கென்று தனியாகச் சேரிகள் என்பன இருக்கலமா?
– தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1,
‘மணியோசை’