ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் திண்டுக்கல் மரியநாதபுரத்தில் நேற்று (16.3.2024) நடைபெற்ற விழாவில் திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.2.62 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 9 மருத்துவ கட்டடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, பயனாளிகளுக்கு மகப்பேறு மருத்துவ பெட்டகத்தை வழங்கினார்கள். அருகில் மாவட்ட ஆட்சித் தலைவர் மொ.நா.பூங்கொடி, பழனி சட்டமன்ற உறுப்பினர் இ.பெ.செந்தில்குமார், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் ச.காந்திராஜன் உட்பட பலர் உள்ளனர்.