சென்னை, மார்ச் 17- புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 82 கூட்டுக் குடிநீர் திட்டங்களை மறு சீரமைப்பு செய்ய ரூ.148.54 கோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் நிர்வாக அனுமதி வழங்கியுள்ளார்.
இதுகுறித்து நகராட்சி நிர்வா கத்துறைச் செயலர் தா.கார்த்தி கேயன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
குடிநீர் வடிகால் வாரியம் மூலம் 544 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் பராமரிக்கப்பட்டு, 4.53 கோடி பேருக்கு பாதுகாக் கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், ஊரகப்பகுதிகளில் உள்ள 1.25 கோடி வீடுகளில், இதுவரை 1.02 கோடி வீடுக ளுக்கு குடிநீர் குழாய் இணைப் புகள் வழங்கப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம், ராணிப் பேட்டை, வேலூர், கன்னியா குமரி, கோவை, தேனி மற்றும் திருவள்ளூர் மாவட் டங்களின் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப் பட்டுள்ளன.
கடந்த 2023 டிசம்பர் மாதம் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பெரு வெள்ளம் காரணமாக தமிழ் நாட்டின் வடக்கு மாவட்டங்களில் 12 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மற்றும் வெள்ளம் காரணமாக தென் மாவட்டங்களில் 70 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் பாதிக்கப் பட்டன. இவை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் தற்காலிக மாக சீரமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டங்கள் முழு திறனுடன் நீண்டகாலம் செயல் பட, இவற்றை நிரந்தரமாக மறு சீரமைப்பு செய்வது அவசிய மாகும். எனவே, புயல், வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட 82 கூட்டுக் குடிநீர் திட்டங்களை மறு சீரமைக்க ரூ.148.54 கோடிக்கு நிர்வாக அனு மதி அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.