சென்னை, நவ. 22- பயங்கரவாத நடவடிக்கைகளை ஒழிப்பதற் காக தமிழ்நாடு காவல் துறையில் புதிதாக தீவிரவாத தடுப்புப் பிரிவை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அதிரடியாக துவக்கியுள்ளார்.
நுண்ணறிவுப் பிரிவு ஏடிஜிபி தலைமையில் கி.ஜி.ஷி. எனப்படும் தீவிரவாத தடுப்புப் பிரிவு செயல் படும் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவ தும் தீவிரவாத தடுப்பு நடவடிக் கைகளில் ஒன்றிய, மாநில அரசு கள் தொடர்ந்து தீவிரமாக கள மிறங்கி உள்ளன.. அப்படியிருந் தும்கூட, ஆங்காங்கே சில சம்ப வங்கள் நடந்துவிடுகின்றன.
கோவை சிலிண்டர் வெடிப்பு
கடந்த வருடம்கூட, கோவை யில் நடந்த குண்டு வெடிப்பு நிகழ்வு தமிழ்நாட்டையே உலுக்கி யெடுத்துவிட்டது. இது தொடர் பாக தேசிய புலனாய்வு முகமை நடத்திய விசாரணையில் ஜமேஷா முபீன், தற்கொலைப் படை தாக்கு தல் நடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.
அத்துடன், என்அய்ஏ அதி காரிகள் இதுகுறித்த விசார ணையில் இறங்கி, நிறைய பேரை கைது செய்திருந்தார்கள். அதே போல, ஆளுநர் மாளிகை அருகே ரவுடி கருக்கா வினோத் பெட் ரோல் குண்டு வீச்சு நிகழ்வும் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத் தியது. தமிழ்நாட்டில் இது போன்ற சம்பவங்கள் நடந்து வந்த நிலையில், தமிழ்நாடு காவல்துறை உயர் அதிகாரிகளு டன் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் ஆலோசனை மேற்கொண் டிருந்தார்.
தடுப்பு நடவடிக்கை
பிறகு, தீவிரவாத செயல்களை உடனடியாக தடுத்து நிறுத்த தமிழ்நாடு காவல்துறையில் சிறப் புப் பிரிவை உருவாக்குமாறும் முதலமைச்சர் உத்தரவிட்டிருந் தார்.
மேலும், தீவிரவாத தடுப்புப் பிரிவு உருவாக்கப்படும் என்று கடந்த ஏப்ரல் மாதம் பேரவை யில் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அறிவிப்பும் வெளியிட்டிருந்தார்.
முதலமைச்சரின் இந்த உத் தரவையடுத்து, அதற்கான பணி களை உள்துறையும் மேற் கொண்டு வந்தது. கேரளா, உத் தரப்பிரதேசம், மகாராட்டிரா, ஆந்திரா ஆகிய 4 மாநிலங்களில் ஏற்கெனவே தீவிரவாத தடுப்புப் பிரிவு உள்ள நிலையில், காவல் துறையை சேர்ந்த உயர் அதிகாரி கள் அங்கு நேரடியாகவே சென்று, அந்த பிரிவுகள் செயல்படும் விதம் குறித்தெல்லாம் ஆய்வு செய்தனர். இறுதியில், பல்வேறு அம்சங்க ளும் கருத்தில் கொள்ளப்பட்டு அதற்கான பணிகளையும் மேற் கொண்டு வந்தனர்.
அரசாணை
இந்நிலையில், தமிழ்நாட் டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, தீவிரவாத தடுப்புப் பிரிவு ஸ்பெஷலாக ஏற்படுத் தப்பட்டிருக்கிறது. முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் அடிப்படையில், மாநில அள வில் தீவிரவாதத்தை தடுக்க புதிய பிரிவை அமைப்பதற்கான அரசாணையும் வெளியிடப்பட் டுள்ளது.
நுண்ணறிவுப் பிரிவு ஏடிஜிபிக்கு கீழ் இந்த புதிய தீவிரவாத தடுப்புப் பிரிவு (ATS) செயல்படும் என்று அறிவித்துள்ளது. 1 டி.அய்.ஜி, 4 எஸ்பிக்கள், 5 ஏஎஸ்பிக்கள், 13 டிஎஸ்பிக்கள், 31 ஆய்வாளர்கள், 61 உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என 383 பேர் இப்பிரிவில் செயல்படுவார்கள்.
4 மாவட்டங்கள்
காவல் துறையில் இருந்து 190 பேரை தீவிரவாத தடுப்புப் பிரி வுக்காக தேர்வு செய்ய உள்துறை செயலாளர் அமுதா உத்தரவிட் டிருக்கிறார்.
முதற்கட்டமாக, சென்னை, கோவை, மதுரை, நெல்லை ஆகிய 4 இடங்களில் முதல் கட் டமாக தீவிரவாத தடுப்புப் பிரிவு தொடங்கப்படவுள்ளது. தமிழ் நாடு முழுவதும் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளை மேற் கொள்ளவும், தன்னிச்சையாக சட்ட நடவடிக்கைகள் எடுக்க வும் இந்த பிரிவுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது.
தீவிரவாத தடுப்புப் பிரிவுக் காகவே, 60.12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு உத்தர விட்டுள்ளது. காவல்துறையின ருக்கு உதவுவதற்காக அமைச்சக பணியாளர்கள் 36 பேர் நியமிக் கப்படவுள்ளனர். அவர்களுக்கு புதிதாக 89 வாகனங்கள் வழங்கப் படவுள்ளன.
பெருத்த நம்பிக்கை
தமிழ்நாட்டில் ஏதாவது பயங் கரவாத செயல்கள் நடந்தால், ஒன்றிய அரசின் என்அய்ஏ, சிபிஅய் உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகள்தான் இங்கு வந்து விசாரிக்க வேண்டியிருக்கிறது. ஆனால், பயங்கரவாத நடவடிக் கைகளை ஒழிப்பதற்காக தமிழ் நாட்டிலேயே, காவல் துறையில் தீவிரவாத தடுப்புப் பிரிவினை முதலமைச்சர் ஏற்படுத்தியி ருப்பது, தமிழ்நாடு மக்களின் கவனத்தை பெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் பயங்கரவா தமே இனி தலைதூக்காதவாறு, காவல்துறை வேரோடு அழித்து விடும் என்றும் நம்பப்படுகிறது.