காரைக்குடியில் தந்தை பெரியார் சிலை நிறுவிய 50 ஆம் ஆண்டு பொன்விழா
சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சியினர் பங்கேற்பு
காரைக்குடி, மார்ச் 16- காரைக்குடி யில் கடந்த 13-.3.-1975ஆம் ஆண்டு தந்தை பெரியார் சிலை அமைக்கப்பட்டது. அந்த நிகழ் விற்கு அன்றைய திராவிடர் கழக தலைவர் அன்னை மணி யம்மையார் தலைமையேற்க செட்டிநாட்டரசர் ராஜா சர் முத்தையா செட்டியார், புரவலர் அன்பில் தர்மலிங்கம், அப்போதைய திராவிடர் கழக பொதுச்செயலாளர் கி.வீர மணி ஆகியோர் முன்னிலையில் அப்போதைய முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பெரியார் சிலையினை திறந்து வைத்தார்கள்.
அதன் பொன்விழா 13.3.2024 அன்று வெகு எழுச்சியுடன் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் திராவிடர் கழக துணைப் பொதுச்செயலா ளர் வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், கழக மாவட்ட காப்பாளர் ஆகி யோர் முன்னிலையில் சாமி.திராவிடமணி, மாவட்ட தலை வர் கு.வைகறை, மாவட்ட செய லாளர் சி.செல்வமணி ஆகியோர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மாவட்ட துணை தலைவர் கொ.மணிவண்ணன், திரா விடர் கழக தொழில்நுட்ப குழு மாநில ஒருங்கிணைப்பாளர் வி.சி.வில்வம், மாவட்ட துணை செயலாளர் இ.ப.பழனிவேலு, கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா, நகர தலைவர் ந.செகதீசன், நகர செயலாளர் தி.க. கலைமணி, கல்லல் ஒன்றிய அமைப்பாளர் கொரட்டி வீ.பாலு, தி.தொ.ச. மாவட்ட தலைவர் சொ.சேகர், மாவட்ட செயலாளர் சி.சூரிய மூர்த்தி, கிளை செயலாளர் ராமன், மகளிரணி நிர்வாகிகள் தி.செயலட்சுமி, தி.தமிழ்ச் செல்வி, ச.ஆனந்தி, பெ.நதியா, தேவகோட்டை நகர தலைவர் வீர.முருகப்பன், தேவகோட்டை ஒன்றிய அமைப்பாளர் வாரி யன் வயல் ஜோசப், சிவ.தில்லை ராசா, மாவட்ட ப.க.எழுத்தா ளர் மன்ற தலைவர் ந.குமரன் தாசு, மாவட்ட ப.க. தலைவர் எஸ்.முழுமதி, மாவட்ட ப.க. செயலாளர் ந.செல்வராசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தி.புரூனோ என்னாரெசு, நகர ப.க. தலைவர் ஆ.பாலகிருட்டிணன், சாமி.திராவிடச்செல்வம், கு. ராஜ்குமார், கோட்டையூர் நாத்தி கம் இராமசாமி, தேவகோட்டை அரவரசன், தி.இ.த. பேரவை நகர செயலாளர் ந.நவில், தி.மு.க. சார்பில் மாநில இலக்கிய அணி புரவலர் மேனாள் அமைச்சர் மு.தென்னவன், நகர் மன்ற தலைவர் சே.முத்துத் துரை, நகர்மன்ற துணை தலைவர் நகர் கழக செயலாளர் நா.குணசேகரன், நகர அவைத் தலைவர் சன்.சுப்பையா, நகர துணை செயலாளர்கள் சொ. கண்ணன், லெட்சுமி, நகர்மன்ற உறுப்பினர்கள் கார்த்திக், தெய் வானை, நாச்சம்மை, லில்லி தெரசு, தனம், மாவட்ட பிரதிநிதிகள் அ.சேவியர், போஸ் குணசேகரன் மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி தலைவர் இராம.அன்பழகன், மாவட்ட நெசவாளர் அணி துணை தலைவர் எம்.பழனி யப்பன், வட்டக் கழக செய லாளர்கள் விஜயகுமார், ராதா கிருஷ்ணன், காங்கிரசு கட்சி யின் சார்பாக கார்த்தி ப.சிதம்ப ரம் எம்.பி, எஸ்.மாங்குடி எம்.எல்.ஏ, மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.எம்.சஞ்சய் காந்தி, நகர காங். செயலாளர் கதி.குமரேசன், வி.சி.க.சார்பில் மாவட்ட செயலாளர் சி.சு.இளைய கவுதமன், நகர செயலாளர் ராஜா முகம்மது, சி.பி.அய். சார்பில் ஏ.அய்.டி.யூ.சி. மாநில நிர்வாக குழு உறுப்பினர் பழ.இராமச்சந்திரன், ம.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் பசும்பொன் சி.மனோகரன், மாநில பொறியாளர் அணி துணை அமைப்பாளர் தி.பிர பாகரன், மாவட்ட இளைஞ ரணி அமைப்பாளர் காரை.கார்த்திக், பொதுக்குழு உறுப் பினர் ராஜ்கமல், கருத்த பக்கீர், ரிஸ்வான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வந்தி ருந்த அனைவருக்கும் இனிப்பு கள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கோலாகலமாக நடைபெற்றது.
தந்தை பெரியார் சிலை அமைப்புக்குழு செயலாளர் சாமி.சமதர்மம் அவர்களுக்கு மேனாள் அமைச்சர் மு.தென் னவன் சால்வை அணிவித்து சிறப்பு செய்தார். சாலையில் ஏராளமான கழகக் கொடிகள் கட்டப்பட்டும், நகர் முழுவதும் வண்ண சுவரொட்டிகள் ஒட் டப்படும் பெரியார் சிலை வளாகம் வண்ண விளக்குக ளால் அலங்கரிக்கப்பட்டும் காட்சியளித்தது.