கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

2 Min Read

16.3.2024

டெக்கான் கிரானிக்கல், சென்னை:
♦ மோடி பேசிய கன்னியாகுமரி கூட்டத்தில் பாஜகவிற்கு வெடித்த சிக்கல்; காங்கிரசில் இருந்து பாஜகவிற்கு தாவிய விஜயதரணியை ஓரம் கட்டும் பொன் ராதாகிருஷ்ணன்.
டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:
♦தேர்தல் பத்திர எண்களை வெளியிடாதது ஏன்? எஸ்பிஅய்க்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்: திங்கள் கிழமைக்குள் பதில் அளிக்க உத்தரவு
♦ 18,871 தேர்தல் பத்திரங்களின் விவரங்களை மட்டுமே ஸ்டேட் பாங்க் அளித்துள்ளது. மீதம் 3,346 பத்திரங்கள் விவரங்கள் வங்கியின் பைல்களில் காணாமல் மாயம்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
♦ பெரிய நிறுவனங்களை மிரட்டி பணம் பறித்துள்ளது பாஜக. – அக்கட்சியின் வங்கிக் கணக்கை முடக்கி, உரிய விசாரணையை உச்ச நீதிமன்றம் நடத்த வேண்டும் என கார்கே பேச்சு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
♦”பாஜக அமைப்பிற்குள் தேவைப்படும் இரண்டு சதவீத கமிஷனை கட்சியைத் தவிர வேறு யாருக்கும் பணம் கொடுக்க வேண்டாம்.” குஜராத்தின் ஜலால்பூரைச் சேர்ந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ்பாய் சோட்டு பாய் படேல் பேச்சால் பரபரப்பு. காங்கிரஸ் கடுமையான விமர்சனம்.
♦ கல்லூரிகளின் முதல்வர்கள் தங்கள் மாணவர்களின் வாக்காளர் அடையாள எண் விவரங்களை சேகரிக்குமாறு கேட்டுக்கொண்ட தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் (ஜிழிஜிணிஹி) சுற்றறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநர் மாளிகையின் வாய்மொழி உத்தரவுதான் காரணம் என்றும் விளக்கம்.
தி இந்து:
♦ அதானி குழுமத்தின் நிறுவனர் கவுதம் அதானியின் நடத்தை மற்றும் நிறுவனம் லஞ்சத்தில் ஈடுபட்டுள்ளதா என்பதில் கவனம் செலுத்த அமெரிக்கா அதன் விசார ணையை விரிவுபடுத்தியுள்ளது என்று ப்ளூம்பெர்க் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
தி டெலிகிராப்:
♦ ராகுல்காந்தியின் நடைப்பயணம் மும்பையில் நாளை நிறைவடைகிறது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் உள்பட “இந்தியா” கூட்டணி தலைவர்கள் பங்கேற்கிறார்கள்
டைம்ஸ் ஆப் இந்தியா:
♦ ஜனநாயக சீர்திருத்த சங்கம் பெற்ற தரவுகளின்படி2017-2018இல் தேர்தல் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, மொத்த நிதியில் கிட்டத்தட்ட 50% தேர்தல் பத்திரங்களிலிருந்து பாஜக பெற்றுள்ளது. அதாவது பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு ரூ.7,700 கோடி கிடைத்துள்ளது.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *