நாகர்கோவில், மார்ச்.16- கன்னி யாகுமரிக்கு வந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்பட 214 பேரை காவல் துறையினர் கைது செய் தனர்.
கருப்புக்கொடி போராட்டம்
கன்னியாகுமரியில் நேற்று (15.3.2024) நடந்த பா.ஜனதா பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். இதனை யொட்டி மோடி வரு கைக்கு எதிராக குமரியில் கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் சார்பில் அறிவிக் கப்பட்டிருந்தது.
அதன்படி நேற்று காலையில் காங்கிரஸ் கட்சியினர் கருப்புக் கொடியுடன் தக்கலையில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம் அருகே திரண்டனர்.
மோடியே திரும்பிப் போ, குடியுரிமை திருத்த சட் டத்தை திரும்ப பெறு போன்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளை கையில் வைத்திருந்தனர்.
இதில் விஜய் வசந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், குமரி மேற்கு மாவட்ட தலைவர் பினுலால் சிங், மாநகர மாவட்ட தலைவர் நவீன்குமார் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கருப்புத் துண்டால் தலைப் பாகையும் கட்டியிருந்தனர்.
214 பேர் கைது
போராட்டத்தின் போது பிர தமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் ‘திருவனந்தபுரத்தில் இருந்து கன் னியாகுமரி நோக்கி பறந்து சென் றதை பார்த்ததும் அவருக்கு எதிராக காங்கிரசார்முழக்கங்களை எழுப்பினர். உடனே அங்கு பாது காப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் போராட்டத் தில் ஈடுபட்ட எம்.பி., எம். எல்.ஏ.க்கள் உள் பட 214 பேரை கைது செய்தனர். இதில் 42 பேர் பெண்கள் ஆவார்கள்.
பிறகு மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். பிரதமர் மோடி வருகைக்கு எதிராக காங்கி ரசார் நடத்திய போராட்டம் தக்க லையில் பரபரப்பை ஏற்படுத்தியது.