மார்க்சிஸ்ட் வேட்பாளர்கள் விவரம் மதுரையில் சு.வெங்கடேசன், திண்டுக்கல்லில் சச்சிதானந்தம் போட்டி

1 Min Read

சென்னை,மார்ச் 16— மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை, திண்டுக்கல் ஆகிய இரு தொகுதிக ளில் போட்டியிடும் வேட்பாளர் கள் பெயர்கள் அறிவிக்கப்பட் டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலக்குழு கூட்டம் நேற்று (15.3.2024) சென்னையில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராம கிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் உறுப்பினர்கள் கலந்து கொண்ட னர்.
இக்கூட்டத்தில் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் மதுரை, திண்டுக்கல் தொகுதிகளில் போட் டியிடும் சிபிஎம் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தி.மு.க. தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்ட ணியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை, திண்டுக்கல் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடு கிறது. மதுரை தொகுதியில், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், தற்போதைய மதுரை நாடாளு மன்ற உறுப்பினருமான சு.வெங்க டேசன் மீண்டும் போட்டியிட உள்ளார்.
திண்டுக்கல் தொகுதியில், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லக்குழு உறுப்பினரும், திண்டுக்கல் மாவட்டச் செயலாளருமான ஆர்.சச்சிதானந்தம் போட்டியிட உள்ளார் என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.
மதுரை தொகுதி எம்பியான
சு.வெங்கடேசன் மீண்டும் இதே தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
திண்டுக்கல் மக்களவைத் தொகுதி சிபிஎம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஆர். சச்சிதா னந்தம், அக்கட்சியின் திண்டுக்கல் மாவட்ட செயலாளர். 53 வயது ஆகும் இவர் பி.எஸ்.சி. பட்டதாரி. 37 ஆண்டுகளாக சிபிஎம்மில் இயங்கி வருகிறார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *