17.9.2023 அன்று வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டா அருகே தி.மு.க.வின் முப்பெரும் விழா நடைபெற்றது. அதில் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு, மானமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார். அவரின் உரையில் முழுக்க முழுக்க தந்தை பெரியாரின் கொள்கைகளே இடம் பெற்றி ருந்தன. மாநாட்டு பந்தலில் எங்கு நோக்கிலும் பெரி யாரின் படங்கள் தென்பட்டன. வருங்கால தலை முறையினருக்கு வழிகாட்டும் விதமாக அனைவரும் உரையில் பெரியார்! பெரியார்! என்று தொடர்ந்து முழக்கமிட்டனர்.
நாம் கண்ட விழாக்களில் இதுபோன்ற ஒரு பெரும் கூட்டத்தினை இதுவரை காணவில்லை. இலட்சக் கணக்கான மக்கள் கூடியிருந்தனர். இவ்விழாவினை மிகுந்த உழைப்பை செலுத்தி ஏற்பாடு செய்த வேலூர் மாவட்ட தி.மு.க.வினருக்கு நமது நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள். குறிப்பாக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் உரை கனகச்சிதமாக இருந்தது. தொடர்ந்து பேசிய அமைச்சர் பெரு மக்கள் தங்கள் உரைகளில் பெரியாரை விட்டுப் பேச முடியா மல் தொடர்ந்தனர். இது பொது மக்களிடம் அய்யாவின் உழைப்பை தெரிந்து கொள்ள வழி வகுத்தது.
விழாவின் ஒரு அம்சமாக தி.மு.க.வின் பழம் பெரும் தொண்டர்களுக்கு பாராட்டும், பரிசளிப்பும் தந்ததில் மக்களிடையே உற்சாகத்தை காண முடிந்தது. இனிவரும் காலங்களில் தங்களால் எதுவும் செய்ய இயலாது என்பது இன எதிரிகளுக்கு தெளிவாகி யிருக்கும் என நம்புகிறேன். ஏராளமான பொருட் செலவில் ஏற்பாடு செய்து, அதிலும் விழாவின் முகப்பே தந்தை பெரியார் கைத்தடியுடன் முத்தமி ழறிஞர் கலைஞரையும், அண்ணாவையும் வைத்தி ருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததுடன், கைப்பேசியில் படமெடுத்த வண்ணம் இருந்தனர்.
ஆக வேலூரில், ஒன்றுபட்ட மதசார்பற்ற இயக் கங்களின் கூட்டணி எத்தகைய வலுவுடன் இருக்கிறது என்பதை, நம் தமிழர் தலைவர் ஆசிரியர் – அவர்களின் கவனத்திற்காக எழுதுகிறேன் – எதிர்காலம் பெரி யாரின் கொள்கைகளுக்கே!
– கல்மடுகன், குடியாத்தம், வேலூர்