சென்னை, மார்ச் 16- புதுக் கோட்டை, நாமக்கல், திருவண்ணா மலை மற்றும் காரைக்குடி ஆகிய நகராட்சிகள் மற்றும் அவற்றுக்கு அருகில் அமைந்துள்ள வேகமாக நகரமயமாகி வரும் பேரூராட்சிகள், ஊராட்சிகள் ஆகியவற்றை ஒன்றி ணைத்து 4 புதிய மாநகராட்சிகளை அமைத்து உருவாக்கவும், அது தொடர்பான நடைமுறைகளை தொடங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள் ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அரசு, பெருநகரங்களுக்கு அரு காமையில் அமைந்துள்ள நகர்ப் புறத் தன்மை கொண்ட, விரைந்து நகரமயமாகி வரும் பகுதிகளிலும் நகரங்களுக்கு இணையான தர மான சாலைகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர், ஆற்றல்மிகு மின் விளக்கு கள், பாதாளச் சாக்கடை போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத் தித் தரும் நோக்கோடு, விரைவாக நகரமயமாகி வரும் பகுதிகளை அவற்றின் அருகாமையில் அமைந் துள்ள நகரங்களோடு இணைத்து விரிவாக்கம் செய்யப்பட்ட நக ராட்சி அல்லது மாநகராட்சிகளாக அமைத்து உருவாக்கி வருகிறது.
இதன்படி, இவ்வரசு கடந்த 3 ஆண்டுகளில், 28 புதிய நகராட்சி கள் மற்றும் தாம்பரம், காஞ்சிபுரம், கடலூர், கும்பகோணம், கரூர், சிவகாசி ஆகிய 6 மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், வரலாற்றுத் தலைநகரமாக விளங்கிய புதுக் கோட்டை, மலை நகரமான திரு வண்ணாமலை, தொழில் நகர மான நாமக்கல், கல்வி நகரமான காரைக்குடி போன்ற நகராட்சி களை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டுமென பெறப் பட்ட கோரிக்கைகளை ஏற்று அந்நகரங்களையும், அவற்றின் அருகாமையில் அமைந்துள்ள விரைந்து நகரமயமாகி வரும் பேரூராட்சிகள், ஊராட்சிகள் போன்ற உள்ளாட்சி அமைப்பு களையும் ஒன்றிணைத்து புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்படும் என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் சட்டப்பேரவையில் 30.03.2023 அன்று அறிவித்தார்.
இந்த அறிவிப்பினை செயல் படுத்துவது தொடர்பான உரிய பரிசீலனைகள் மேற்கொள்ளப் பட்டதன் அடிப்படையில், 4 புதிய மாநகராட்சிகளை அமைத்து உரு வாக்குதற்கான நடைமுறைகளை தொடங்கிட தற்போது ஆணையிடப்பட்டிருக்கிறது.
இதன்படி, புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 11 ஊராட்சிகளை ஒன்றிணைத்து புதுக்கோட்டை மாநகராட்சி, திருவண்ணாமலை நகராட்சி மற்றும் 18 ஊராட்சிகள், அடி அண்ணாமலையிலுள்ள பகு திகள் ஆகிவற்றை ஒன்றிணைத்து திருவண்ணாமலை மாநகராட்சி, நாமக்கல் நகராட்சி மற்றும் 12 ஊராட்சிகளை ஒன்றிணைத்து நாமக்கல் மாநகராட்சி, காரைக் குடி நகராட்சி மற்றும் இரண்டு பேரூராட்சிகள், அய்ந்து ஊராட் சிகளை ஒன்றிணைத்து காரைக் குடி மாநகராட்சி என மொத்தம் 4 புதிய மாநகராட்சிகளை உரு வாக்குவது தொடர்பான அரசின் உத்தேச முடிவினை அறிவித்து இன்று (15.3.2024) ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
1998-ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத் தின்படியான உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டு புதிய மாநக ராட்சிகள் அமைத்து உருவாக் கப்படும்.
இதன்மூலம், புதுக் கோட்டை, நாமக்கல், திருவண்ணா மலை, காரைக்குடி ஆகிய நகராட்சி கள் மற்றும் அதன் அருகாமையில் அமைந்துள்ள உள்ளாட்சி பகுதி களில் சாலைகள், பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் உள் ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேலும் சிறப்பாக ஏற்படுத்தவும் மற்றும் இப்பகுதியில் வசிக்கும் மக்கள், பல்வேறு தேவைகளுக்காக இப்பகுதிகளுக்கு வந்து செல்வோர், சுற்றுலாப் பயணிகள், வணிக நிறுவனங்கள், தொழில் துறையினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பயன் பெறும் வகையில் வாழ்க்கைத் தரம் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஏற்படவும் வாய்ப் பாகவும் அமையும்” எனத் தெரிவிக் கப்பட்டுள்ளது.