லூயி பாஸ்டியர் ரேபிஸ் கிருமிகளை ஆராய்ச்சி செய்து மருந்து கண்டு பிடித்து மனித குலத்தைக் காத்தார்.
எட்வர்ட் ஜென்னர் அம்மைக் கிருமிகளை ஆராய்ச்சி செய்து அம்மை நோயில் இருந்து மனித குலத்தைக் காத்தார்.
அலெக்சாண்டர் ஃப்ளம்மிங் பெனிசிலின் கண்டுபிடித்து மனித குலத்தைக் காத்தார்.
ஜோனஸ் சால்க் போலியோவுக்கு மருந்து கண்டு பிடித்து மனித குலத்தைக் காத்தார்.
இப்படி கண்டுபிடித்தவர்கள் எல்லாம் யார் என்று பார்த்தால் வர்ணாசிரமம் என்ற வார்த்தையைக் கூட அறியாதவர்களாகத்தான் இருக்கிறார்கள்.
கார்ல் லாண்ட்ஸ்டினர் குருதிப் பிரிவுகளைக் கண்டுபிடித்து இது எல்லா இன, மொழி, மதத்தவருக்கும் பொதுவானதுன்னு கூறி தலையிலிருந்து, மார்பிலிருந்து, தொடையிலிருந்து, காலில் இருந்து பிறந்தவர்கள் என்ற பொய்ப் புரட்டை உடைத்துப் போட்டார்.
ஆனால், இங்கே, காட்டில் இருக்கும் ஒரு மிருகத்தை பாலுக்காக பிடித்து வந்து பழக்கப்படுத்தி வைத்துக் கொண்டு அது புனிதமானது, முப்பத்து முக்கோடி தேவர்கள் அதன் உடலில் வாழ்கிறார்கள் என்று காலங்காலமாக அதன் மூத்திரத்தை ஆராய்ச்சி செய்து கொண்டு சக மனிதனைக் கொடுமை செய்கிறான்.
அந்தப் புனிதமான மிருகத்துக்கு வரும் ஆந்த்ராக்ஸ்,கோமாரி நோய்க்காச்சும் மருந்து கண்டுபிடிச்சது யார்ன்னு பார்த்தால் அதுகூட இந்த வர்ணாசிரம தர்மக்காரன் இல்ல.
(சமூக ஊடகங்களிலிருந்து… )