அமெரிக்காவில் சட்டம் படிக்கச் செல்லும் உச்ச நீதிமன்ற ‘கேன்டீன்’ சமையல்காரர் மகளுக்கு தலைமை நீதிபதி பாராட்டு தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற வளாகத்தில் உள்ள ‘கேன்டீனில்’ சமையல்காரராக பணி யாற்றுபவரின் மகள் பிரக்யாவுக்கு அமெரிக்காவில் உள்ள 2 முன்னணி பல்கலைக்கழகங்களில் சட்டமேற்படிப்பு படிக்க வாய்ப்பு கிடைத்து உள்ளது. அதற்காக உதவித்தொகை கிடைத் துள்ளது. இதையடுத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையில் பாராட்டு விழா நடந்தது. அப்போது அமெரிக்காவில் மிக்சிகன், கலிபோர்னியா ஆகிய 2 பல்கலையில் முதுநிலை சட்டப்படிப்பு கிடைக்க உதவித்தொகை கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்த தலைமை நீதிபதி சந்திர சூட், மாணவி பிரக்யாவின் குடும்பத்தை அழைத்து அவர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார். மேலும் இந்திய அரசியல் சட்டம் தொடர்பான 3 புத்தகங்களில் கையெழுத்து போட்டு மாணவி பிரக்யாவுக்கு அவர் பரிசாக வழங்கி, ‘அமெரிக்காவில் படித்து முடித்து விட்டு தாய்நாட்டிற்கு வந்து மீண்டும் சேவை செய்ய வேண்டும்’ என்று தெரிவித்தார்.
நீதிமன்ற உணவகத்தின் கடைநிலை ஊழியரின் மகளை சட்டம் படிக்கவைத்து மேற்படிப்பிற்கு அமெரிக்கா அனுப்பிவைத்த தலைமை நீதிபதி
1 Min Read
வரலாற்று நிகழ்வு
நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு
பொன்மொழிகள்
தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.
நல்ல நேரம்: 24 மணி நேரமும்
மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
