அன்னை மணியம்மையார் அவர்களின் 105ஆம் ஆண்டு பிறந்த நாள் 10.3.2024 அன்று தமிழ்நாடெங்கும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அதன் விவரம் வருமாறு:
தாம்பரம்
10.03.2024 அன்று காலை அன்னை மணியம்மையார் பிறந்த நாளையொட்டி தாம்பரம் பெரியார் புத்தக நிலையத் தில் அன்னையார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தாம்பரம் மாநகர இளைஞரணி செயலாளர் ச.ச.அழகிரி தலைமையில் மேனாள் தாம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் எஸ்.ஆர்.வெங்கடேஷ் முன் னிலையில் தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ் மற்றும் பெரியார் உணர்வாளர் மாடம்பாக்கம் அ.கருப்பையா ஆகி யோர் அன்னை மணியம்மையார் பிறந்த நாளையொட்டி தாம்பரம் பெரியார் புத்தக நிலையத்தில் அன்னையார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஒசூர்
ஓசூர் கழகம் சார்பில் அன்னைமணியம்மையாரின் 105ஆவது பிறந்தநாள் ஒசூர் ராம்நகரில் மாவட்ட தலைவர் சு.வனவேந்தன் தலைமையில் மணியம்மையார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் திமுக பகுதி செயலாளர் கேடிஆர், தலைமை செயற்குழு உறுப்பினர் எல்லோரமணி, மாமன்ற உறுப்பினர்கள் தேவிமாதேஷ், பாக்கியலட்சுமி குப்புசாமி, தமிழ்தேச குடியரசு இயக்கம் மாவட்ட செயலாளர் விக்னேஷ், கழக மாவட்ட செயலாளர் மா.சின்னசாமி, திராவிட மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் க.கா.சித்தாந்தன், சி.கி.வாசு, சக்தி வேல், மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்
கிருட்டினகிரி
கிருட்டினகிரி மாவட்ட கழக சார்பில் கிருட்டினகிரி பெரியார் மய்யத்தில் அன்னை மணியம்மையார் 105 – ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி அவரது படத்திற்கு மாவட்டச் செயலாளர் கா.மாணிக்கம் தலைமையில் தலைமைக்கழக அமைப்பாளர் கோ.திராவிடமணி, மாவட்ட ப.க.தலைவர் ச.கிருட்டினன், நகரத் தலைவர் கோ. தங்கராசன், ஒன்றியத் தலைவர் த.மாது, மாவட்ட இளைஞரணி துணைச்செயலாளர் அ.கோ.இராசா, ப.க. ஆர்.எம்.ஜெயின் ஆகியோர் கலந்து கொண்டு அன்னையார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சிதம்பரம்
சிதம்பரத்தில் அன்னை மணியம்மையார் அவர்களின் 105ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சிதம்பரம் தந்தை பெரியார் சிலை அருகில் அன்னை மணியம்மையார் அவர் களின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது மாவட்ட திராவிட கழக தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் தலைமையில் மாவட்ட செயலாளர் அன்பு சித்தார்த்தன், மாவட்ட துணை தலைவர் பெரியார் தாசன், மாவட்ட இணைச் செயலாளர் யாழ் திலீபன், மாவட்ட பகுத்தறிவாளர்கள் தலைவர் நெடுமாறன், மாவட்ட அமைப் பாளர் தென்னவன், திமுக நிர்வாகி ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர் அன்னை மணியம்மையார் படத்திற்கு மாலை அணிவித்தனர்.
திருப்பத்தூர்
அன்னை மணியம்மையார் அவர்களின் 105ஆவது பிறந்தநாள் விழா. அதை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டம் சார்பில் திருப்பத்தூர் நகரில் பெரியார் – அண்ணா அருகில் காலை 10.00 மணியளவில் அன்னை மணியம்மையார் படத்திற்கு மாலை அணிவித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி எழுச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
விழா முன்னிட்டு தந்தை பெரியார் அவர்களின் “பெண் ஏன் அடிமையானாள்?” புத்தகத்தை பெண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டது.
இவ்விழா திருப்பத்தூர் மாவட்ட தலைவர் கே. சி. எழிலர சன் தலைமையில் நடைபெற்றது. மேலும் அன்னை மணியம் மையார் படத்திற்கு மாநில மகளிரணி பொருளாளர்
எ.அகிலா மாலை அணிவிக்க, அனைத்துத் தோழர்களும் புகழ் வணக்கம் செலுத்தினார்கள்.
ஞானப் பிரகாசம் விடுதலை வாசகர் வட்ட தலைவர் மற்றும் எம். என். அன்பழகன் ஆகியோர் பெரியார் – அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்தனர்.
மேலும் இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் பெ. கலை வாணன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சி.ஏ.சிற்ற ரசன், மாவட்ட துணைத் தலைவர் தங்க அசோகன், ப.க. மாவட்ட தலைவர் சி.தமிழ்ச்செல்வன், நகர தலைவர் காளி தாஸ், நகர செயலாளர் ஏ.டி.ஜி.சித்தார்த்தன், கந்திலி ஒன்றிய தலைவர் பெ.ரா.கனகராஜ், சோலையார்பேட்டை ஒன்றிய தலைவர் கே. ராஜேந்திரன், சோலையார்பேட்டை ஒன்றிய செயலாளர் தா. பாண்டியன், மாவட்ட அமைப்பாளர் மகளி ரணி அ.விஜயா, மாவட்ட தலைவர் மகளிர் பாசறை ர.கற்பகவள்ளி, மாவட்ட செயலாளர் மகளிர் பாசறை சி.சபரிதா, மாவட்ட தலைவர் பகுத்தறிவு ஆசிரியரணி கோ. திருப்பதி, மாவட்ட அமைப்பாளர் தொழிலாளரணி கே.மோகன், சோலையார்பேட்டை செயலாளர் மதியழகன், நகர தலைவர் சோலையார்பேட்டை சிவக்குமார், மாவட்ட ப. க. எழுத்தாளர் மன்றம் நா. சுப்புலட்சுமி, மாவட்ட தலைவர் இளைஞரணி எஸ்.சுரேஷ்குமார், நகர அமைப்பாளர் க.முருகன், இளைஞ ரணி பொறுப்பாளர் இசைப்பிரியன், மகளிர் பாசறை இலக்கியா ஆகியோர் பங்கேற்றனர்.
திருமங்கலம்
அன்னை மணியம்மையார் அவர்களின் 105 பிறந்த நாளினை முன்னிட்டு, உசிலம்பட்டி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக, திருமங்கலம் பெரியார் சிலை முன்பு அன்னையார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர், நிகழ்ச்சிக்கு தலைமை: பா. முத்துக் கருப்பன் மாவட்ட செயலாளர், உசிலம்பட்டி கழக மாவட்டம், பங்கேற்று சிறப்பித்தவர்கள்: த. ம. எரிமலை மாவட்ட தலைவர் உசிலம்பட்டி கழக மாவட்டம், வி. தங்கத்துரை பகுத்தறி வாளர் கழகம், இரா. கலைச்செல்வி உசிலை மாவட்ட மகளி ரணி செயலாளர், ரோ. கணேசன் மாவட்ட அமைப்பாளர், அழ. சிங்கராசன் மாவட்ட து. தலைவர், ஜெ. பாலா மேலூர் மாவட்ட செயலாளர், பெ. பாக்கியலட்சுமி மேலூர் மாவட்ட மகளிரணி செயலாளர், பா. சதீஷ்குமார் மாணவர் கழக செயலாளர், ச.அறிவுச்செல்வி மாணவர் கழக துணை தலை வர், ச.அறிவுப்பாண்டி மாணவர் கழக துணை செயலாளர், ம.ரஞ்சித்குமார் மாணவர் கழகம், மு.தேன்மொழி மாணவர் கழகம், மு. சந்தியா மாணவர் கழகம், செ. விசாலி மகளிர் பாசறை, மற்றும் ஏறாளமான தோழர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்ட கழக சார்பாக திராவிடர்கழக மேனாள் தலைவர் தொண்டறத்தாய் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் பிறந்த நாள் விழா மற்றும் கழக தகவல் தொழில்நுட்ப ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவில், ஒழுகினசேரி தந்தை பெரியார் மய்யத்தில் நடைபெற்றது. தொண்டறத் தாய் அன்னை மணியம்மையார் அவர்களுடைய படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப் பட்டது. பிறந்த நாள் விழா நிகழ்ச்சிக்கு கழக குமரிமாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமை தாங்கி உரையாற்றினார்.
மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் முன்னிலை வகித்து அன்னையார் தொண்டுகள், இராவணலீலா நடத்திய அன்னையாரின் துணிச்சல், தந்தை பெரியாருக்குப் பின் இயக்கத்தை எழுச்சிகரமாக நடத்திய வரலாறு குறித்தும், திராவிடர்கழக தகவல் தொழில்நுட்ப செயல்பாடுகள் குறித் தும் உரையாற்றினார். பகுத்தறிவாளர்கழக மாவட்டத் தலை வர் உ.சிவதாணு, கழகக் காப்பாளர் ஞா.பிரான்சிஸ், கழக கோட்டாறு பகுதி தலைவர் ச.ச.மணிமேகலை, கழக மாவட்ட இளைஞரணி செயலாளர் எஸ்.அலெக்சாண்டர், கழக தோவாளை ஒன்றிய செயலாளர் ந.தமிழ்அரசன், பகுத்தறி வாளர்கழக மாவட்ட செயலாளர் எம்.பெரியார் தாஸ் ஆகி யோர் உரையாற்றினர். கழக குருந்தன்கோடு ஒன்றிய செயலாளர் வில்லுக்குறி செல்லையன், அழனாபுரம் சிதம்பரம் மற்றும் பலர் பங்கேற்றனர்.