திருவள்ளூர், மார்ச் 15- திருவள்ளூர் மாவட்டம், மணவாள நகரில் இந்தியன் வங்கி உள்ளது. இந்த வங்கியின் ஏ.டி.எம்., மய்யத்தில் உள்ள இயந்திரத்தை, வங்கி உதவி மேலாளர் பிரதீப் மேற்பார்வையில் பொறியாளர் ‘சர்வீஸ்’ செய்து கொண்டிருந்தார்.
அதே பகுதியைச் சேர்ந்தவரும், பா.ஜ.க, மாநில இளைஞரணி செயற் குழு உறுப்பினருமான அபிலாஷ் (வயது 35) என்பவர், பணம் எடுக்கச் சென்றபோது அங்கு பணியில் பிரதீப் அவரை தடுத்தார். இப்போது பணம் எடுத்தால், இயந்திரத்தில் கோளாறு ஏற்படும் என கூறியுள்ளார். இதனால், இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அபிலாஷ், பிரதீப்பை அநாகரிகமாக பேசி, காலணியால் அடித்து தாக் கினார்.
இதுகுறித்து பிரதீப் புகாரின்படி வழக்குப் பதிந்த மணவாள நகர் காவல்துறையினர், அபிலாஷை கைது செய்தனர். திருவள்ளூர் ஜே.எம்., – 2 நீதிபதி பவித்ரா முன் நேற்று ஆஜர்படுத்தி, சொந்த பிணையில் அவர் விடுவிக்கப் பட்டார்.
இதுதான் பிஜேபி! வங்கி மேலாளரை தாக்கிய பா.ஜ.க. நிர்வாகி கைது
Leave a Comment