2014ஆம் ஆண்டு பெட்ரோல் ரூ71.41 ஆகவும், டீசல் ரூ56.71 ஆகவும் இருந்த விலை, கடந்த 10 ஆண்டு கால மோடியின் பா.ஜ.க. ஆட்சியில் முறையே ரூ.102.63 ஆகவும், ரூ.94.24 ஆகவும் உயர்ந்திருக்கிறது. கச்சா எண்ணெய்யின் விலை பல மடங்கு குறைந்தபின்னும், உக்ரைன் போர் காரணமாகப் பன்னாட்டு பெட்ரோல் சந்தை சரிந்த பின்னும்கூட விலையைக் குறைக்காமல், தேர்தல் என்றதும் 1 ரூபாய் 88 பைசா குறைத்தது, தேர்தல் நெருங்குகிறது என்பதற்கான முன்னோட்டம்தான் என்று வாக்காளர் களுக்குத் தெரியாதா?