சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள புதிய யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன கட்டடத்தை உருவாக்க இந்தியாவின் மிகப் பெரிய துருப்பிடிக்காத எஃகு உற்பத்தியாளரான ஜிண்டால் ஸ்டெயின்லெஸ் நிறுவனம் சமார் 1000 டன்கள் லி316 தர உயர்தர துருப்பிடிக்காத எஃகு பொருள்களை வழங்கியுள்ளது. அதைக் கொண்டு பூகம்பத்தை எதிர்க்கும் மற்றும் ஆற்றல் திறன் கொண்ட அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, மெட்ராஸ் மற்றும் அய்.அய்.டி. பாம்பே ஆகியவற்றின் ஒப்புதலுடன் 62 மீட்டர் உயரம் கொண்ட இந்த கட்டடம், புத்தாக்க தொழில்நுட்பத்தில் இந்திய பசுமைக் கட்டடக் குழுவின் தரத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் சிறப்பான வெளிப்புறங்கள் துருப்பிடிக்காத எஃகின் சுமை தாங்கும் மற்றும் பேரழிவைத் தடுக்கும் பண்புக் கூறுகளால் உருவாக்கப்பட்டுள்ள இந்த கட்டமைப்பு கட்டட அரிப்பை தடுக்க வல்லது என ஜிண்டால் ஸ்டெயின்லெஸ் நிறுவன நிருவாக இயக்குநர் அபியுதாஜ் ஜிண்டால் தெரிவித்துள்ளார்.
பூகம்பத்தைத் தாங்கும் புதிய கட்டடம்
Leave a Comment