சென்னை, செப்.28 ‘இண்டியா’ கூட்டணியில் எவ்வித பிரச்சினையோ, சலசலப்போ இன்றி ஒற் றுமையாக உள்ளது என்றமதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக – பாஜக கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழ்நாட்டில் ‘இண்டியா’ கூட் டணியின் செயல்பாடுகள் உற்று நோக்கப்பட்டு வருகின்றன.
இந் நிலையில், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள விசிக தலை வர் திருமாவளவனை, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தொலைப்பேசியில் நலம் விசா ரித்தார். இந்த தகவல், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தச் சூழலில், அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று (27.92023) சந்தித்துப் பேசினார்.
அதன்பின் செய்தியாளர்களி டம் அவர் கூறியதாவது: தொகுதி மறுவரையறை குறித்தும், அது எந்த அளவு தமிழ்நாட்டைப் பாதிக்கும் என்பது குறித்தும், ஜாதிவாரி கணக்கெடுப்பின்போது, ஓபிசி பிரிவினரையும் கணக்கெ டுக்க வேண்டும் என்பது குறித்தும் ஏற்கெனவே காமராஜர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இடம் பெற்ற வாதங்கள் குறித்தும் முதல மைச்சரிடம் நான் எடுத்து கூறி னேன். முதலமைச்சர் அவர் கருத் தையும் தெரிவித்தார்.
அமைதியான நீரோடை
இதற்காகத்தான் வந்தேன். கூட்டணி குறித்து பேசவில்லை. திமுக கூட்டணியில்தான் தொடர் கிறேன். ‘இண்டியா’ கூட்டணி ஒற்றுமையாக இருக்கிறது. எந்த சலசலப்பும் இல்லை. அமைதியாக நீரோடை போன்று போகிறது. அதிமுக தரப்பில் தூது ஏதும் வரவில்லை.
அதிமுக – பாஜக கூட்டணி பிளவு என்பது உண்மையானதா, நாடகமா என்பது காலப்போக்கில் தான் தெரியும். தமிழ்நாட்டை ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி 50 லட்சம் பேர் கையெழுத்திட்டனர். இதனை குடியரசுத் தலைவரின் செயலரிடம் அளித்தபோது, உடனே பதில் தருவதாகக் கூறினார்.
தற்போது உள்துறைக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி குறையலாம்
தொகுதி மறுவரையறை செய் யப்படும்போது, தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும். 8 நாடாளுமன்ற உறுப் பினர்கள் குறையலாம். அதேநேரம் மத்திய பிரதேசம், உத்தர பிரதேசத் தில் எண்ணிக்கை உயரும். அப்படி வரும்போது இந்திய வரைபடத்தில் நம் எண்ணிக்கை குறைந்து, அதன் விளைவுகள் இந்திய ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் விரோத மாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.