இம்பால், செப்.28 மணிப்பூரில் நிலவும் சட்டம் – ஒழுங்கு பிரச் சினையை கருத்தில் கொண்டு, ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின் கீழ் (AFSPA) மாநிலம் முழுவதையும் ‘கலவரப் பகுதி’ (disturbed area) ஆக அம்மாநில அரசு அறிவித்தது. தலைநகர் இம்பால் உள்ளிட்ட 19 காவல் நிலையங்கள் உள்ள பகுதிகளைத் தவிர மாநிலம் முழுவதும் இந் நிலை 6 மாதங்களுக்கு அமலில் இருக்கும். இது குறித்து மணிப் பூர் மாநில அரசு 27.9.2023 அன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘பல்வேறு தீவி ரவாத / கிளர்ச்சி குழுக்களின் வன்முறை நடவடிக்கைகள் மணிப்பூர் முழுவதும் சிவில் நடவடிக்கை களைத் தொடருவதற்கு ஆயுதப் படைகளின் உதவியை நாடும் உத்தர வாதத்தை அளிக்கின்றது.
தற்போது மாநிலத்தில் நில வும் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை மற்றும் அரசு இயந்திரத்தின் திறன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பதற்றமாக உள்ள இடங்களின் நிலையை இன்னும் ஆறு மாத காலத்துக்கு பதற்ற மான இடங்களாக அறிவிக்க அரசு முடிவு செய்துள்ளது. தலைநகர் இம்பால் உள்ளிட்ட காவல் நிலையங்கள் உள்ள 19 இடங்களுக்கு இந்த நிலை பொருந்தாது’ என்று தெரி விக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மணிப்பூரில் இணைய சேவை முடக்கம் ரத்து செய்யப்பட்ட உடனேயே வெளியான இரண்டு மாணவர்களின் உடல்களைக் கொண்ட ஒளிப்படம் விரைந்து சமூக வலைதளங்களில் வைர லான நிலையில், 26.9.2023 அன்று இரவு தலைநகர் இம்பாலில் போராட்டம் மூண்டது. இதனைத் தடுக்க பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குத லில் போராட்டக்காரர்கள் 45 பேர் காயமடைந்தனர். இதில் பெரும்பாலானவர்கள் மாண வர்கள் ஆவர். அதிரடிப்படையினர் கண்ணீர்ப் புகை குண்டு களை வீசியும், ரப்பர் தோட் டாக்களைப் பயன்படுத்தியும், தடியடி நடத்தியும் போராட் டத்தைக் கட்டுப்படுத்தினர். இந்நிலையில், அங்கு மீண்டும் இணைய சேவை முடக்கப் பட்டது. மேலும், வன்முறைகள் வெடிக்கலாம் என்ற அச்சத்தால் பல பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு அமல்பட்டிருக்கிறது. இருப்பினும், காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை உணவு, மருந்து உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக் கொள்ளும் வகையில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. தளர்வு இருந்தாலும் கூட அநாவசியமான கூடுகைகள், பேரணிகள், பொதுக் கூட்டங் களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் காவல்துறை, சிஆர்பிஎஃப், அதிரடிப்படையினர் என மாநிலம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள் ளது. இதற்கிடையில், 29-ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அறி விக்கப்பட்டுள்ளது. மாணவர் களின் கொலை குறித்து மாநில முதல்வர் பிரேன் சிங் கூறு கையில்,
“குற்றவாளிகளை பிடிக்க மாநில அரசும், ஒன்றிய அரசும் தீவிரமாக இணைந்து செயல் படுகிறது என மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.