சென்னை, மார்ச் 13- மார்ச் 8ஆம் தேதி ஆண்டுதோறும் பன்னாட்டு மகளிர் நாள் கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது. அதையொட்டி சென்னையில் உள்ள முன்னணி பன்னோக்கு மருத்துவமனையான பிரசாந்த் மருத்துவமனை சென்னை மாநகர பெண் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர் களுக்காக பிரத்யேகமாக ஒரு மாத கால இலவச மேமோகிராம் மற்றும் மார்பக ஆலோசனை முகாமை நடத்துகிறது. இந்த முகாமின் முக்கிய நோக்கம், மார்பக புற்றுநோய் மற்றும் அது தொடர்பான பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிவதை ஊக்குவிப்பதும், விழிப் புணர்வை ஏற்படுத்துவதும் ஆகும்.
கொளத்தூரில் உள்ள பிரசாந்த் மருத்துவமனையில் இந்த முகாம் பிரசாந்த் மருத்துவமனைகள் மற்றும் பிரசாந்த் கருத்தரிப்பு ஆராய்ச்சி மய்யத் தலைவர் கீதா அரிப்பிரியா, பிரசாந்த் மருத்துவ மனைகள் இயக்குநர் டாக்டர் சம்ஹிதா மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் பிரசாந்த் கிருஷ்ணா ஆகியோர் முன்னிலையில் அறிவிக்கப்பட்டது.