வடகுத்து, செப்.28 வடகுத்து திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியார் 145 ஆவது பிறந்தநாள் விழா மற்றும் கலைஞர் நூற் றாண்டு விழா 22.9.2023 அன்று மாலை 6 மணி முதல் 10 மணி வரை மாவட்ட கழகத் தலைவர் தண்ட பாணி தலைமையில் ஆர்ச் கேட் எதிரில் நடைபெற்றது.
மாவட்ட அமைப்பாளர் மணி வேல் வரவேற்புரை ஆற்றினார். மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வேலு, மாவட்ட இளைஞரணி தலைவர் உதய சங்கர், அமைப்பாளர் டிஜிட்டல் ராமநாதன், மாவட்ட பகுத்தறி வாளர் கழகத் தலைவர் வெங்க டேசன், செயலாளர் அருணாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
வடலூர் நகரக் கழகத் தலைவர் புலவர் ராவணன் தொடக்க உரை ஆற்றினார். மாவட்ட பகுத்தறி வாளர் கழக அமைப்பாளர் தர்ம லிங்கம், ஒன்றிய கழகத் தலைவர் கனகராஜ், ஒன்றிய செயலாளர் செந்தில் வேல், வடக்குத்து இந்திரா நகர் கிளைக் கழக தலை வர் பாஸ்கர் செயலாளர் கண்ணன், வடலூர் நகர செயலாளர் குணசேகரன், மேனாள் ஒன்றியத் தலைவர் இந்திரஜித், கட்டியாங் குப்பம் சேகர், மாவட்ட இணை செயலாளர் பஞ்சமூர்த்தி, நெய் வேலி நகரத் தலைவர் இசக்கிமுத்து, செயலாளர் ரத்தின சபாபதி, அரும்பாக்கம் தாமோதரன், தாம் பரம் சந்திரசேகர், கடலூர் மாத வன் ஆகியோர் நிகழ்வில் பங்கேற் றனர்.
இயக்கப் பாடல்களை கோபு .பழனிவேல், புலவர் பொன்னரசு, வேகா கொல்லை மாணிக்கவேல் ஆகியோர் பாடினர்.
கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் நடுவராக பொறுப்பேற்று ‘‘முத்த மிழறிஞர் கலைஞரின் நிலைத்த புகழுக்குப் பெரிதும் காரணம் – அறிவுத்திறனே! – ஆட்சித்திறனே!” எனும் தலைப்பில் பட்டிமன்றத்தை நடத்தினார்.
‘அறிவு திறனே’ என்ற அணியில், முனைவர் அதிரடி அன்பழகன், கடலூர் எழிலேந்தி ஆகியோரும், ‘ஆட்சித்திறனே’ என்னும் அணி யில் ராம.அன்பழகன், தாமோ தரன் ஆகியோர் சிறப்பாக வாதா டினர்.
கலைஞரின் நிலைத்த புகழுக்கு அவரின் ஆட்சித்திறனும், அறிவு திறனும் காரணம் தான்; ஆயினும் பெரிதும் காரணம் எனும் பட்டி மன்ற தலைப்பை ஒட்டி இரு தரப்பினரும் வெகு சிறப்பாக பேசினர்.
முடிவில் நடுவர் இரண்டுமே பெரிதும் காரணம் என்று தீர்ப்பு வழங்கினார். நிறைவாக கண்ணன் நன்றி கூறினார்.