பெரியபாளையம், மார்ச் 12- கும் மிடிப்பூண்டி மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையத்தில் 8.3.2024 அன்று மாலை 6 மணியளவில் இளை ஞரணி சார்பில் “இந்தியா கூட்டணி வெல்ல வேண் டும் ஏன்?” என்ற தலைப் பில் தெருமுனைக் கூட் டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு கும்மிடிப்பூண்டி மாவட்ட இளைஞரணி தலைவர் சோழவரம் ப. சக்கரவர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட இளை ஞரணி செயலாளர் அ. ஆகாஷ் வரவேற்புரை ஆற்றினார். தொடக்கவு ரையாக மாநில இளைஞ ரணி துணைச் செயலா ளர் சோ.சுரேஷ் மிகச் சிறப்பான முறையில் பி.ஜே.பி. ஒன்றிய ஆட்சி யில் தமிழ்நாட்டுக்கு எதி ரான வஞ்சகப் போக் கனை எடுத்துக் கூறினார்.
தலைமைக் கழக அமைப்பாளர் வி.பன்னீர் செல்வம் மற்றும் கும் மிடிப்பூண்டி மாவட்ட தலைவர் புழல்.த. ஆனந் தன் கருத்துரை வழங்கி னர்.
கிராமப் பிரச்சாரக் குழு மாநில அமைப்பா ளர் முனைவர் அதிரடி அன்பழகன் இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும் ஏன்? என்கிற தலைப்பில் மீண்டும் மோடி ஆட்சி ஏன் வரக் கூடாது என்பதற்கான காரணங்களை அடுக்கிக் கூறி பாசிச பாஜகவின் அராஜகங்களை,பொய்ப் பித்தலாட்டங்களை தோலுரித்து காட்டினார். இறுதியாக மாவட்ட இளைஞரணி அமைப் பாளர் பொன்னேரி க.கார்த்திகேயன் நன்றி யுரை ஆற்றினார்.
சி.பி.அய்.எம். கே.செல் வராஜ், எல்லாபுர ஒன் றிய இளைஞரணி துணை அமைப்பாளர் தி.மு.க அய்.ராஜா, தி.மு.க முன் னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஈ.ராஜா , விடு தலை சிறுத்தைகள் கட்சி யின் மாநில பொறுப்பா ளர் கோ.நீலன், ஓவியர் சங்க மாநில அமைப்பு செயலாளர் ஜி.டி.வேலு மயில், விடுதலை சிறுத்தை கள் கட்சியின் மாநில தொழில் துறை அமைப் பாளர் பி.நாகராஜ், கும் மிடிப்பூண்டி மாவட்ட செயலாளர் ஜெ.பாஸ்கர், எல்லாபுரம் ஒன்றிய தலைவர் அய்.அருணகிரி, பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் ஓவியர் ஜனாதிபதி, புழல் ஒன்றிய கழக செயலாளர் வடகரை உதயகுமார், புழல் நகர தலைவர் சோமு, புழல் நகர செயலாளர் க.ச.க. இரணியன், பொன் னேரி நகர தலைவர் வே.அருள், பொன்னேரி நகர செயலாளர் மு.சுதா கர், மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் கெ.முருகன், பொன்னேரி இளைஞ ரணி தலைவர் சு.எழில், பொன்னேரி இளைஞ ரணி செயலாளர் க.சுகன் ராஜ், புதுவாயல் இரணி யன் பெரியபாளையம் கலைவேந்தன்,செல்வம், தி.மு.க.கவுன்சிலர் ரவி, கம்யூனிஸ்ட் கட்சி ப. ஜெகநாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சி அய். ஏழுமலை, முனுசாமி, கா. நந்தன். சி.பி.அய்.பொன் னேரி ஜீவா மற்றும் பொதுமக்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.