பெரியார் மருந்தியல் கல்லூரியில் பன்னாட்டு அளவிலான நானோ தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கம்

viduthalai
2 Min Read

திருச்சி, மார்ச் 12- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் மருந்தாக்கவியல் துறை சார்பில்“An Emerging Interface Between Life Science and Nanotechnology – Present Status and Future Prospects” என்ற தலைப்பிலான பன்னாட்டு அளவிலான நானோ தொழில் நுட்பம் குறித்த ஒரு நாள் கருத் தரங்கம் 29.02.2024 அன்று நடை பெற்றது.
இதன் துவக்கவிழா காலை 9.30 மணியளவில் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது.
பெரியார் மருந்தியல் கல்லூரி யின் முதல்வர் முனைவர் இரா.செந் தாமரை வரவேற்புரையாற்றினார். துணை முதல்வர் முனைவர்
கோ.கிருஷ்ணமூர்த்தி வாழ்த்துரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து துவக்கவிழா நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் மைசூர் CSIR– மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தின் உயிர் வேதியியல் துறை திட்ட இணை அலுவலர் முனைவர் தீரன் இராஜராஜன் நானோ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, பயன்பாடு மற்றும் ஆராய்ச்சி குறித்து சிறப்புரையாற் றினார். துவக்கவிழா நிகழ்ச்சியின் நிறைவாக மருந்தாக்கவியல் துறைத் தலைவர் முனைவர் இரா.இராஜ கோபாலன் நன்றியுரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து முதல் அமர்வாக CSIR– மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவ னத்தின் உயிர் வேதியியல் துறை திட்ட இணை அலுவலர் முனை வர் தீரன் இராஜராஜன் இளைய தலைமுறைகளைஅதிகம் பாதிக் கும் உடற்பருமன் நோய் குறித்தும் பெருகி வரும் மார்பக புற்றுநோய் குறித்தும் மாணவர்களிடையே விளக்கினார்.
மலேசியா AIMST பல்கலைக்கழ கத்தின் மருந்தாக்க வேதியியல் துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் இரவிச்சந்திரன் வீரா சாமி இணைய வழியில் நானோ துகள்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்தார்.

புற்றுநோய் ஆராய்ச்சியில்
நானோ தொழில்நுட்பம்
மூன்றாம் அமர்வாக திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் IQAC ஒருங்கிணைப்பாளரும் வேதியியல் துறை இணை பேராசிரியருமான முனைவர் சையத் அலி பாதுஷா புற்றுநோய்த் துறையில் நானோ தொழில்நுட்பத்தின் பங்கு குறித் தும் வளர்ந்து வரும் புற்றுநோய் ஆராய்ச்சி குறித்தும் உரையாற்றி னார். அதனைத் தொடர்ந்து மாலை 5 மணியளவில் நிறைவு விழா கல்லூரி அரங்கத்தில் நடை பெற்றது.
பெரியார் மருந்தியல் கல்லூரி யின் முதல்வர் முனைவர் இரா.செந் தாமரை தலைமையில் மருந் தாக்கவியல் துறைத் தலைவர் முனைவர் இரா. இராஜகோபாலன் வரவேற்புரையாற்றினார். திருச்சி கிருஷ்ணா மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் சிவகுருநாதன், பெரியார் மருந்தியல் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர்
கோ.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிறைவு விழா சிறப்புவிருந்தினர் முனைவர் சையத் அலி பாதுஷா மருந்தாளுநர்கள் நானோ தொழில் நுட்பம் குறித்த பல ஆய்வுகளை மேற்கொண்டு நோயில்லாத ஆரோக்கியமான சமுதாயம் உரு வாக பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு கருத்தரங்கில் பங்குகொண்ட பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு சான்றி தழ்கள் வழங்கியதுடன் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்தல் போட் டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் பாராட்டுச் சான்றி தழ்களையும் வழங்கி சிறப்பித்தார்.
நிகழ்ச்சியின் நிறைவாக மருந் தாக்கவியல் துறை பேராசிரியர் ஆர். காயத்ரி நன்றியுரையாற்றினார். இணையம் மற்றும் நேரடியாக நடைபெற்ற இக்கருத்தரங்கில் தமிழ்நாடு, கருநாடகம், புதுச்சேரி, உத்தரப்பிரதேசம், கேரளா, தெலங் கானா, மத்தியப்பிரதேசம், அசாம், குஜராத் மற்றும் ஒடிசா மாநிலங் களிலிருந்து 371 மாணவர்கள், பேராசிரியர்கள், அறிவியல் ஆய்வ றிஞர்கள் மற்றும் பல்துறை ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் 33 கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் பங்கேற்ற இக்கருத்தரங்கில் 86 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *