கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
28.9.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்
* மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி வர வேண்டும். மெய்தி, குக்கி, நாகா மக்களுக்கு உரிய நீதி வழங்க வேண்டும் என்கிறது தலையங்க செய்தி.
தி இந்து
* பல நுழைவு மல்டிபிள் எக்சிட் திட்டம், மாநிலங்களிடையே குழப்பத்தை உருவாக்கும் என புதிய கல்விக் கொள்கை நடைமுறை குறித்து அமைக்கப்பட்ட நாடாளுமன்றக் குழு அறிக்கை.
* கோயில் அருகே உள்ள கடையில் பிரசாதம் திருடியதாக சந்தேகத்தின் பேரில் பழ வியாபாரியின் 26 வயதான முகமது இசார் என்ற சிறப்புத் திறனுள்ள மகன், டில்லியில் காவி துணியால் மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்துக் கொல்லப்பட்டார்.
* இஸ்கான் தனது கவுசாலாக்களில் (மாட்டுக் கொட்டகையில்) இருந்து கசாப்புக் கடைகளுக்கு மாடுகளை விற்கும் நாட்டிலேயே மிகப்பெரிய ஏமாற்று நிறுவனம் என பாஜக எம்.பி. மேனகா காந்தி குற்றச்சாட்டு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்
* ஜாதியை பாதுகாக்கவும், சமூக சீர்திருத்தவாதிகளுக்கு எதிரான எதிர்வினையாக ஸநாதனம் உருவானது என்கிறார் கிறிஸ்டபர் ஜாப்ரலெட்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
தனக்கு எதிராக இழிவான கருத்துக்கள், கொலை மிரட்டல்கள் வருவதாக பி.எஸ்.பி. எம்.பி. டேனிஸ் அலி டில்லி காவல் துறையில் புகார்.
டைம்ஸ் ஆப் இந்தியா
பாஜகவின் திறமையற்ற மணிப்பூர் முதலமைச்சரை பிரதமர் மோடி பதவி நீக்கம் செய்ய வேண்டும். மணிப்பூருக்கு பிரதமர் செல்லாததற்கு கண்டனம், மல்லிகார்ஜூன கார்கே.
– குடந்தை கருணா