சென்னை,மார்ச் 12- தமிழ்நாட்டில் மாநில நூலகம், மாவட்ட மய்ய நூல கங்கள், கிளை நூலகங்கள், ஊர்ப்புற நூலகங்கள் என 4,500-க்கும் மேற்பட்ட பொது நூலகங்கள் இயங்கி வருகின்றன. இவை அனைத்தும் பொது நூலக இயக்ககத்தின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்படுகின்றன.
இவற்றுக்குத் தேவைப்படும் நூல் கள், பருவ இதழ்கள், நாளிதழ்கள் ஆகியவை வெளிப்படைத்தன்மையுட னும், எவ்விதப் புகார்களுக்கு இடம் அளிக்காமலும் கொள்முதல் செய்யும் வகையில், கடந்த வாரம் பள்ளிக்கல்வித் துறை ஓர் அரசாணை வெளியிட்டது.
அதில், பொது நூலகங்களுக்குத் தேவையான நூல்களை கொள்முதல் செய்ய பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் இடம்பெற்றன. புத்தகங்களைக் கொள் முதல் செய்ய இணைய வழியில் விண் ணப்பிக்கும் புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. புத்தகங்களை தேர்வு செய்யும் குழுவிலும், புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத் தப்பட்டுள்ளன.
இந்நிலையில், பொது நூலகங்களுக் குத் தேவையான நூல்களை கொள்முதல் செய்வதற்காக https://bookprocurement.tamilnadupubliclibraries.org/ என்ற பிரத் யேக இணையதளத்தை பொது நூலக இயக்ககம் உருவாக்கியுள்ளது.
இதனை 10.3.2024 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கிவைத்தார். பள் ளிக்கல்வித் துறைச் செயலர் ஜெ.குமரகுரு பரன், பொது நூலக இயக்குநர் கே.இளம் பகவத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.