சென்னை, மார்ச் 12- வணிகவரி மற்றும் பதிவுத் துறை செயலராக இருந்த பா.ஜோதி நிர்மலாசாமி, மாநில தேர்தல் ஆணை யராக நியமிக்கப்பட்டுள் ளார்.
சமீபத்தில் மாநில தேர் தல் ஆணையரின் பதவிக் காலத்தை பதவி யேற்றதில் இருந்து 5 ஆண்டுகள் அல் லது 65 வயது வரை என்று தமிழ் நாடு அரசு உயர்த்தி யது. இந்த சூழலில், ஏற்கெ னவே மாநில தேர்தல் ஆணையராக இருந்த பழனிக்குமார் கடந்த மார்ச் 9-ஆம் தேதி ஓய்வு பெற்றார்.
மாநில தேர்தல் ஆணை யர் பதவி காலியாக இருந்த நிலையில், அப்பதவியில் வணிகவரி மற்றும் பதிவுத் துறை செயலராக உள்ள பா.ஜோதி நிர்மலாசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான அறி விக்கை நேற்று (11.3.2024) தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், பா.ஜோதி நிர் மலாசாமியை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணை யராக ஆளுநர் நியமித் துள்ளார். இவர் பதவியேற்ற நாளில் இருந்து 5 ஆண் டுகள் அல்லது 65 வயது வரை பதவியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள் ளது.
தற்போது மாநில தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள ஜோதி நிர்மலாசாமி வரும் மே மாதம் ஓய்வு பெற உள்ளார். இந்நிலை யில் அவருக்கு இப்பதவி வழங்கப்பட்டுள்ளது.