100 நாள் வேலைத்திட்ட நிதியை முடக்குவதா? டில்லிக்கு படையெடுப்போம் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா போர்க் கோலம்

1 Min Read

அரசியல்

கொல்கத்தா,. செப்.29  100 நாள் வேலைத் திட்ட நிதியை ஒன்றிய அரசு முடக்கி வைத்துள்ளது. அது தொடர்பாக பாதிக்கப் பட்ட மக்கள் எழுதிய கடிதங்களுடன் டில்லிக்கு படையெடுப் போம் என்று மம்தா கூறியுள்ளார்.

மேற்கு வங்காள மாநில முதலமைச்சர், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா  தனது சமூக வலைத்தள பக்கத் தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது : 

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம் எனப்படும் 100 நாள் வேலைத்திட்டத்தை செயல் படுத்துவதில் சிறப்பாக செயல் படுவதாக மேற்கு வங்காளம் பெயர் எடுத்துள்ளது. இருப் பினும், அந்த திட்டத்துக்காக மேற்கு வங்காளத்துக்கு கொடுக்க வேண்டிய நிதியை பொறாமை மற்றும் பழிவாங்கும் அரசிய லுக்காக ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளது.  2 ஆண்டுகளுக்கு மேலாக ரூ.6 ஆயிரத்து 907 கோடி நிதியை முடக்கி வைத் துள்ளது. பிரதமரின், வீடு கட்டும் திட்டத்துக்கான நிதியும் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால், மேற்கு வங்காள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நிதி பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. மக்கள் நீண்ட காலத்துக்கு இதை சகித்துக் கொள்ள மாட்டார்கள். மக்களின் உரிமைக்காக போராட நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். டில்லியுடன் நேருக்குநேர் மோத தயாராகி விட்டோம். இந்த போராட்டத்தை  டில்லிக்கு எடுத்துச் செல்வோம். பாதிக்கப் பட்ட மக்கள் எழுதிய கடிதங் களுடன் டில்லிக்கு படை யெடுத்து செல்வோம். மக்களின் குரல், டில்லியில் உள்ள தலை வர்களின் காதுகளை எட்டுவதை உறுதி செய்வோம். ஒன்றிய அரசுக்கு அடிபணிய மாட் டோம். ஒன்றிய அரசின் பழி வாங்கும் அரசியல் முடிவுக்கு வர வேண்டும். மேற்கு வங்காளத்துக் காகவும், அதன் மக்களுக்காகவும் உறுதியுடன் நிற்கிறோம். நீதி கிடைக்கும்வரை ஓய மாட் டோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *