இஸ்ரோவின் கீழ் செயல்படும் விக்ரம் சாராபாய் விண்வெளி மய்யத்தில் (வி.எஸ்.எஸ்.சி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். தவிர ஓட்டுநர் உரிமம், பணிஅனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
காலியிடம்: இலகுரக வாகன ஓட்டுநர் பணிக்கு 9, கனரக வாகன ஓட்டுநர் 9 என மொத்தம் 18 இடங்கள் உள்ளன.
வயது: 27.11.2023 அடிப்படையில் 18 – 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, திறன் (ஷிளீவீறீறீ) தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 500. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: 27.11.2023
விவரங்களுக்கு: vssc.gov.in