சென்னை, மார்ச் 11- கொருக்குப் பேட்டையில் மளிகைக் கடையில் குட்கா விற்பனை செய்யப்பட்ட வழக்கில் பாஜக பிரமுகர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது:
கொருக்குப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் யுவராஜ் தலைமையிலான காவல் துறை யினர் அப்பகுதியில் தீவிர கண் காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள நைனி யப்பன் தெரு மளிகை கடை ஒன்றில் குட்கா விற்பனை செய்யப் படுவதாக ரகசிய தகவல் கிடைத் தது. இதையடுத்து, அங்கு விரைந்து சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, அங்கு பதுக்கி வைத்திருந்த 23 கிலோ குட்கா, 104 பாக்கெட் மாவா, அது தயாரிக்க பயன்படும் 30 கிலோ ஜர்தா என்னும் மூலப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக கடையை நடத்தி வந்த பச்சை யம்மாள் கைது செய்யப்பட்டார்.
அவரது சகோதரி முனியம்மாள் தலைமறைவானார். அவரை காவல் துறையினர் தேடி வருகின் றனர். இது ஒருபுறம் இருக்க பச்சை யம்மாளுக்கு குட்கா விற் பனை செய்ய உடந்தையாக இருந்ததாக கொருக்குப் பேட்டை யைச் சேர்ந்த ராஜேந்திரன், லோகேஷ், நரேந்தர் ஆகிய மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில் கைதான ராஜேந்திரன் ராயபுரம் பாஜக கிழக்கு மண்டல பொருளாளராக உள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
தலைமறைவாக உள்ள முனியம் மாளை தொடர்ந்து தேடி வருவதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.