அயோத்தில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமன் கோயிலின் கட்டுமானத்துக்கு இதுவரை ரூ.1,100 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அயோத்தியில் ராமன் கோயில் கட்டுவதற்காக உச்ச நீதிமன்ற தீர்ப்பின் பேரில், ஒன்றிய அரசால் சிறீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை (Ram Janmabhoomi Teertha Kshetra – RJTK) அமைக்கப்பட்டது. இந்த அறக்கட்டளை கோவில் கட்டும் பணிகளை கவனித்து வருகிறது. மேலும், கோயிலுக்கான நன்கொடை வசூலையும் இந்த அறக்கட்டளை தான் கவனித்து வருகிறது.
மார்ச் 2023 நிலவரப்படி, நாடு முழுவதிலுமிருந்து ரூ. 3,500 கோடிக்கு மேல் திரட்டியுள்ளதாக தெரிகிறது.
சிறீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக் கட்டளைக்கு வருமான வரித்துறை பெரிய நிவாரணம் வழங்கியுள்ளது. சிறீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளைக்கு விதிக்கப்பட்ட 1800 கோடி ரூபாய் வரி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த நாட்களில் நடந்த அறக்கட்டளை கூட்டத்தில் இது குறித்த தகவலை அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத் ராய் தந்துள்ளார்.
பிப்ரவரி 2021 இல், அறக்கட்டளைக்கு வழங்கப் பட்ட வரி விலக்குகள் பற்றிய தகவல்களைக் கோரி கைலாஷ் சந்திர மூந்த்ரா, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோரிக்கை மனு தாக்கல் செய்தார். மூந்த்ரா, ஒரு பட்டய கணக்காளர் மற்றும் ராம ஜென்மபூமி பிரச்சாரத்தில் தீவிரமாக இருந்த மேனாள் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் ஆவார்.
மே 2020 இல், மத்திய நேரடி வரிகள் வாரியம் RJTK அய் “வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இட மாகவும், புகழ்பெற்ற பொது வழிபாட்டுத்தலமாகவும்” அறிவித்தது.
வருமான வரிச் சட்டத்தின் 80G(2)(b) பிரிவு, “அதிகாரப்பூர்வ அரசிதழில், ஒன்றிய அரசால் வரலாற்றுச் சிறப்புமிக்கதாக அறிவிக்கப்பட்டுள்ள கோயில், மசூதி, குருத்வாரா, தேவாலயம் அல்லது பிற இடங்களைப் புதுப்பிக்க அல்லது பழுது பார்ப்பதற்கான நன்கொடைகளுக்கு விலக்கு அளிக்கிறது. மாநிலம் அல்லது மாநிலம் முழுவதும் தொல்பொருள் அல்லது கலை முக்கியத்துவம் அல்லது புகழ்பெற்ற பொது வழிபாட்டு இடமாக இருக்க வேண்டும். அத்தகைய விலக்குக்குத் தகுதிபெற, வழிபாட்டுத் தலமானது சட்டத்தின் 12A பிரிவின் கீழ் தன்னைப் பதிவு செய்து கொள்ள வேண்டும், இதற்கு அறக்கட்டளை வழக்கமான தணிக்கைகளைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்தப் பிரிவின் கீழ் சிறீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை சமர்ப்பித்த அனைத்து ஆவணங்களையும் மூந்த்ரா கோரினார்.
இதற்கு எதிராக மூந்த்ரா ஒரு எளிய வாதத்தை முன்வைத்தார். அவர் மேல்முறையீட்டு ஆணை யத்திடம், சிறீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை, ரூ. 3,400 கோடியை உயர்த்தி யிருந்தால், அந்த நேரத்தில் கூறப்பட்டபடி, அறக் கட்டளைக்கு குறைந்தபட்சம் பத்து சதவீதம் வரி என்ற விகிதத்தில் கணக்கிடப்பட்டால் குறைந்தபட்சம் ரூ. 340 கோடி வரிச் சலுகையை வழங்கியது என்று பொருள்.
“கோயில்களை புதுப்பித்தல் மற்றும் பழுதுபார்ப் பதற்கு மட்டுமே வரிவிலக்கு அனுமதிக்கப்படுகிறது,” என்று மேல் முறையீட்டு ஆணையர் கூறியுள்ளார். “ராமன் கோவிலில் புதுப்பிப்பு எங்கே நடைபெற்றது? இது முற்றிலும் புதிய கட்டுமானம். புதிய கட்டுமானத்திற்கு எப்படி விலக்கு அளிக்க முடியும்?”
மேனாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அளித்த ரூ.5 லட்சம் நன்கொடைக்கான ரசீதில் “ராம ஜென்மபூமி கோவிலை புதுப்பிப்பதற்காக” பணம் வழங்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளதையும் மூந்த்ரா கண்டுபிடித்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில், பல ஆர்வலர்கள்-மற்றும் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் கூட, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர், ஆனால் ஒவ்வொரு முறையும் சிறீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட் டளையை ஆய்வு செய்வதிலிருந்து பாதுகாக்க அரசாங்கம் ஒத்துழைப்பு தந்துள்ளது.
சிறீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக் கட்டளை ஒரு பொது அதிகாரம் இல்லை என்ற ஒன்றிய வருமான வரித்துறையின் வாதங்களை ஒன்றிய தகவல் ஆணையம் நிராகரித்தது, தகவலை வெளிப்படுத்துவது தனியுரிமையை சமரசம் செய்யும் என்ற வாதத்தையும் இது நிராகரித்தது. ஜனவரி 2023 இல், ஒன்றிய வருமான வரித்துறை டில்லி உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்து மத்திய தகவல் ஆணையத்தின் (CIC) உத்தரவுக்கு தடை பெற்றது.
கோவிட்-19 தொற்றுநோய்களின் போது நிவா ரணம் வழங்குவதற்காக அமைக்கப்பட்ட PM CARES நிதி பற்றிய தகவல்களை மறுப்பதற்கு இந்த தடை உத்தரவை முன்னுதாரணமாக மோடி அரசு பயன்படுத்தியது.
இது மட்டுமன்றி, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக நிலம் வாங்குவதில் பெரிய மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ‘2 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலம் சில நிமிடங்களுக்குப் பிறகு 18.5 கோடி ரூபாய்க்கு மறுவிற்பனை செய்யப்பட்டுள்ளது,’ என்று சமாஜ்வாதி கட்சி தலைவரும், மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான தேஜ்நாராயண் பாண்டே என்கிற பவன் பாண்டே குற்றம்சாட்டியுள்ளார்.
இதேபோல, ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங், லக்னோவில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் குற்றம்சாட்டியுள்ளார். “நிலத்தின் விலை, விநாடிக்கு சுமார் 5.5 லட்சம் ரூபாய் அதிகரித்துள்ளது. இந்தியாவில் மட்டுமல்ல உலகில் எந்த நிலமும் ஒரு நொடியில் இவ்வளவு விலை உயர்ந்திருக்க வாய்ப்பில்லை.
இந்த விவகாரத்தை உடனடியாக அமலாக்க இயக்குநரகம் மற்றும் சிபிஅய் விசாரிக்க வேண்டும் என்றும் ஊழல்வாதிகள் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்றும் நான் கோருகிறேன் “என்று அவர் தெரிவித்தார்.
அதே நேரத்தில், விஸ்வ ஹிந்து பரிஷத் இந்த விஷயத்தில் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது. அனைத்து ஆவணங்களையும் ஆராய்ந்து பார்த்து குற்றச்சாட்டின் தன்மை கண்டறியப்படும் என்பதே விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்புடன் தொடர் புடையவர்களின் ஒரே பதிலாக உள்ளது.
பல ஆண்டுகளாக மோடி அரசாங்கம் எவ்வாறு செயல்பட்டு வருகிறது என்பதை அறிந்தவர்களுக்கு, சிறீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக் கட்டளையின் பரிவர்த்தனைகளில் உள்ள தெளிவற்ற தன்மை ஆச்சரியப்படுவதற்கில்லை.
சிறீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக் கட்டளை நிலத்திற்கு அதிகப் பணம் கொடுத்து, வழக்கமான கொள்முதல் நடைமுறைகளைத் தகர்த்து, இடைத்தரகர்கள் திடீர் லாபத்தைப் பெற அனுமதித் தது, அரசாங்கம் வெளிப்படைத்தன்மையைத் தேடும் அனைத்து முயற்சிகளையும் தடுத்து நிறுத்தியபோதும், கேள்விக்குரிய சூழ்நிலையில் அதைக் கணக்கில் வைத்திருக்க வேண்டிய நிறுவனங்கள் அதற்கு நற்சான்றிதழ் கொடுத்தன.
இந்த ஊழல் ராமனின் பெயரில் நடத்தப்பட்டது என்பது ஹிந்து வலதுசாரிகளின் பாசாங்குத்தனத்தை எடுத்துக்காட்டுகிறது, ஆனால் இந்தியாவில் மதத்தில் வணிகம் எவ்வளவு லாபகரமானது மற்றும் அரசியல் மூலதனம் என்பது – மோடி ஏற்கெனவே பக்தியைக் காட்டுவதன் மூலம் – குவிந்துள்ள நிலையில் – ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஒட்டு மொத்தத்தில் பார்ப்பன மேலாதிக்கத்தை மேம்படுத்தும் ஒரு வாகனமே அயோத்தியில் ராமன் கோவில் என்கிறார் காரவன் பத்திரிகையின் கட்டுரை யாளர் சாகர்.
தகவல் திரட்டு: குடந்தை கருணா