சென்னை, மார்ச் 11- தி.மு.க. கூட்டணியில் இணைந்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மக்களவைத் தேர்தலில் ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாநிலங்களவைத் தேர் தலில் அக்கட்சிக்கு ஒரு சீட் ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது.
கூட்டணி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், திமுக கூட்டணியில் இணைந்தது ஏன் என்பது தொடர்பாக பேசிய அவர், “இந்த தேர்த லில் நான் போட்டியிட வில்லை. திமுக கூட்ட ணிக்கு எங்களின் எல்லா ஒத்துழைப்பும் கிடைக்கும். இது பதவிக்கான விடயம் அல்ல. நாட்டுக்கான விட யம் என்பதால் எங்கு கை குலுக்க வேண்டுமோ அங்கு கை குலுக்கியுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.